Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-04-13 
picture for poem
தீத்துண்டுக் கனவு.. இரண்டாவது பழம்
கவிதா. நோர்வே
  இவரின் பிற கவிதைகள்
 
தீத்துண்டுக் கனவுகள்.. இரண்டாவது பழம்

01.
தீத்துண்டுக் கனவுகள்
-------------------------------

முற்பற்றை
கறுத்த வானம்
முகம் தெரியவில்லை
அவர்கள் மூர்க்கமானவர்கள்
இனம் புரியவில்லை
இயலாமைக்குள் என் இருக்கை

புதர்களின் இடையில்
என் கூச்சல்
அடிவயிற்றிலேயே அடங்கிவிட

மூண்டெழுந்த தீத்துண்டு
மார்பில்
தணியாது எரிகிறது

ஆயிரம்தலை நாகம் போல
என் உருக்கவ்வி
செரிக்கின்றனர்

தீ சுட்ட ரணங்களாய்
வடுக்களும்
உடலெங்கும் கிறுக்கல்களும்


நரகங்களுக்கப்பால்
பயணப்பட்டு நான்
மீளுகையில்...
இறந்தடங்கிய நிகழ்வெல்லாம்
தற்கால கனவுகளாய்
கனத்துக் தொங்கும் ராத்திரிகள்

இன்னும் விடியவில்லை
இன்றும் அதே கனவு.

தன் உடல் எரித்த
மெழுகுகொன்று தன்னை
நிறுத்திக் கொண்டது
தெரிகிறது

வெற்றுத்தாள் போல்
என்னைச் சுற்றி
எந்த வார்த்தைகளுமற்ற
வெறுமையில்...
என் சனத்தின் பாவை என்னை
விழுங்குதல் போல்
விரியும் கனவு

எப்போ கண்கள் மூடுமென
உற்றுப்பார்த்த வண்ணம்
தலைமாட்டில் அமர்ந்துகொண்டிருக்கும்
வெட்கங்கெட்ட
அதே கனவு

நான் சுருண்டு கொள்கிறேன்

எத்தனை இரவுகள்
கனவுப்பயம் சுமந்த இமைகள்
வாய் பிளந்து விறைக்கும்
சொல்!

இரவுகள் புதிதல்ல
கனவுகள் புதிது
இரவினை ஒத்து
எந்தன் சுற்றம் கொடிது

காயங்கள் விழுங்கி
கண்களை மூட
கனவுகள் செறிக்கும்
இரவுகள் கடக்க...
வழி ஆயிரம் இருக்கிறது
இரவுகள் கடந்தால்...
வாழ்வில்
இன்னும் ஏதோ இருக்கிறது!


02.
இரண்டாவது பழம்
-----------------------

பெண் புரட்சி என்பது
ஏதேன் தோட்டத்து வேலி
தகர்த்துக் கிளம்பிய
முதல் பெண்ணிலிருந்தே
தொடங்கலாம்...

ஆண்கள் வேட்டையாடினர்
பெண்கள் சமைத்தனர்
என்ற
இலகு வரலாற்றை
எழுதித்தர
நான் தயாரில்லை

”நேசிப்பது
போராடுவது
பணி செய்வது”
எனும் பெண் வரலாறு
சிதையும் உளியை
கையிலெடுத்திருக்கின்றேன்

என் உளியின் முனை
தட்டும் இடமெல்லாம்
உயிர் பெறட்டும்
மிச்சம் மீதி துகள்களாகட்டும்

சமூகத்தின் சிதைவுகளை
எதிர்க்கத் துணித்ததனால்
நான் அடங்காப்பிடாரி என்றால்
அப்படியே இருக்கட்டும்

நீயூட்டனின்
மூன்றாம் விதி
எடுத்துரைத்த எதிர்வினையாய்
நான்

ஏதேன் தோட்டத்தின்
இரண்டாவது பழம்
இப்போது என் கையில்


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 
இவருக்கான விமர்சனம்
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும் .. [கவிதைப்பித்தன்]




சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்