Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-03-15 
picture for poem
எனது மண்ணும் எனது வீடும்.. கடன்
நடராஜா முரளிதரன், கனடா
  இவரின் பிற கவிதைகள்
 
எனது மண்ணும் எனது வீடும்.. கடன்

01.
எனது மண்ணும் எனது வீடும்
---------------------------------

என்னவர்களிடம் தோற்ற ஒருவனாக
எனது வீட்டுக்குச் செல்லும்
வாகனத்தை எதிர்நோக்கிக்
காத்திருக்கின்றேன்
எந்த வாகனங்களும் என்னை
ஏற்றிக் கொள்ளவில்லை

காலணியற்ற பாதத்தோடு
எவ்வளவு காத தூரம்
நடந்து விட்டேன்

எத்தனை கனவுகளோடு
எனது வீடு நோக்கிய
பயணத்தை ஆரம்பித்திருப்பேன்

வீட்டு வாசலிலே எனக்காக
வேம்புகளும் பூவரசுகளும்
இன்னும் காத்தபடியிருக்கின்றன
என்ற நம்பிக்கைகளை
என்னால் இழக்க முடிவதில்லை

ஆனாலும் எனது வீடு
அழிந்து தரை மட்டமாகி
மண்மேடாகி இருப்பதாகவும்
அதன் மீது பற்றைக் காடுகள்
செழித்து வளர்ந்திருப்பதாகவும்
சேதிகள் வருகின்றன

ஆயினும் நான்
அங்கு சென்றடைந்தால்
ஒரு சிறு குடிலையாவது
என்னால் அமைத்து விட முடியும்

அங்கு எனக்கான வானமும்
நட்சத்திரங்களும் காற்றும்
என்னோடு உரையாடுவதற்காக
எதிர்பார்த்தபடியிருக்கின்றன

எனது முன்னோர்கள்
எரியுண்ட புதையுண்ட
அந்த இடுகாட்டு மண்ணிலே
எஞ்சியிருக்கும் எலும்புத் துண்டுகளில்
ஒன்றையேனும் நான்
மாலையாக அணிந்து கொள்வேன்

ஆலமரத்துக் காளியிடம்
பகிர்ந்து கொள்வதற்காக
நான் பல கதைகளை
என்னுள்ளே வைத்திருக்கின்றேன்

அருகிலே சூலத்தோடு வீற்றிருக்கும்
வைரவர் முன்னே
சுடலைச் சாம்பரைப் பூசி
கலையொன்றை ஆடுவதற்கு
உடுக்கை அடிப்பவர் எங்கே



02.
கடன்
----------

சகல மூலைகளிலும் இருந்து
தனித்துவிடப்பட்ட போதும்
தாக்குவதற்கான படையணிகள்
இல்லாதபோதும்
கண்ணுக்குப் புலப்படாத
பிரதேசங்களிலிருந்து
கொடூரமான அம்புகள்
பாய்ச்சப்படுகின்றன

பெரும்பாலானவை
அது பற்றியதாகவே
இருக்கின்றது

வறுமை எவ்வளவு
கொடியதாக இருக்கின்றது
நேரகாலத்துக்கு
அது கணக்குகளை
முடித்துவிட
அனுமதிப்பதில்லை

அதனால்
முகம் குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
அதனைக் கண்டு
பலர் சிரித்தும்
சிலர் அனுதாபப்பட்டும்

எல்லாவற்றையும்
வென்று விடுவதற்கான
வைராக்கியத்தை இழந்து
நடந்து கொண்டிருக்கின்றேன்

மாலைச் சூரியன்
தெறித்து விழுந்து
நிழலாகிப் போகின்றது
என் நிழல் என்னை
விழுங்கி விட்டிருந்தது
பனிக்கும்பியின் உச்சிகள்
தகர்ந்து கொண்டிருந்தன

தோலைக் கிழித்து
நாளங்களின்
இரத்த ஓட்டத்தில் கலந்து
உடலின் மூலைமுடுக்குகளில்
குத்திக்கொண்டு நின்றன
அம்பின் கூரிய முனைகள்


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்