இலையுதிராக் காலம்
------------------------
விட்டாச்சு லீவு,
பாட்டி வீட்டுக்கு பயணம்.
ஒத்த ஓலக் குடிசையில
காத்திருக்கும் என் பாட்டி.
போன பொங்கலுக்கு வாங்கின பானையில
எரும தயிருல ஊறவச்ச பழைய சாதமும்,
பக்கத்துக்கு தோட்டத்துல உதிர்ந்த மாவடுவும்
எனக்காக காத்திருக்கும்.
பக்கத்து வீட்டு தெண்டுல்கரும், எதிர் வீட்டு டோனியும்,
மட்டையுடன் கண்முன் வந்து போனார்கள்.
வாடகை சைக்கிளும், வாய்க்கால் வரப்பில திரிஞ்சதும்.
நினைப்புல வந்து போச்சி .
ஊர்க்கோடியில் பட்டம் விடவும் ,
ஊருணியில் குளிக்கவும் ஆச வந்துச்சி.
பனைமரக் காத்துல, பாட்டி மடில படுத்துக்கிகிட்டு
விக்கிரமாதித்தன் கத கேட்க நினைப்பு வந்துச்சு.
ஊர்க்கோடி அய்யனாருக்கு, காசு முடிஞ்சு நேர்ந்துக்கனும்
வருஷத்துக்கு ரெண்டு கோடைக்காலம் வரணும்னு.
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|