கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-02-06
தூசு.. தலையில்லா..
ஈழநிலா, இலங்கை
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- மழையாக பெய்திடுவோம்..
- பேருந்து..
- மாட்டுக்கு மாலை போட..
- நவீன துச்சாதனனும் ந..
- விருதுகள் வாங்கும் ..
- நெருப்பாய் எரியும் ..
01.
தூசு
--------
மார்கழியில் மாற்றிடவா மாலை!-நீ
மனமுவந்தால் பூக்குமடி சோலை!-நான்
கார்வளவு கேட்டிடதா காளை!-எனை
காதலிக்க வந்திடுநல் வேளை!
மோருண்ட சுகம்தந்த பெண்ணே!-நிதம்
மோதுதடி என்மனசில் மின்னே!
நீர்காற்று வானமழை முன்னே-உயிர்
நீதானே வேணுமடி கண்ணே!
பேரழகி என்மனசு வெள்ள!-நீ
பேசிடாது போவதேன்டி முல்ல!
பாருலகில் உன்னழகை வெல்ல -எந்த
பேரழகும் ஊருலகில் இல்ல...!
பாடலிலே உன்னழகை சொல்ல!-தினம்
பாடுபட்டு பாணனிவன் துள்ள!-நீ
ஊடலிலே பார்வைகளால் கொல்ல!-பயந்து
உதிருதடி வார்த்தைகளும் மெல்ல!
பனிமலரே பரிவுடனே பாரு!-நீ
பாசமுடன் நேசமொழி கூறு..!
கனிமொழியே காதலுடன் சேரு!-நிதம்
கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு!
மாரழகி மனம் திறந்து பேசு!-இளம்
மாருதமே தென்றலென வீசு!
சீர்வரிசை தேவலடி காசு!-அவையுன்
சிருங்கார மொழிமுன்னே தூசு!
02.
தலையில்லா முண்டங்கள்
-----------------------------------
தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!
தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!
தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!
தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!
தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!
தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்