Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-02-06 
picture for poem
ஜனநாயக அடிமை.. வெல்லத் தமிழினி
மன்னார் அமுதன்
  இவரின் பிற கவிதைகள்
 
ஜனநாயக அடிமைகள்.. வெல்லத் தமிழினி தாகும்

01.
ஜனநாயக அடிமைகள்
----------------------------
மெய்யைத் தின்ற இருட்டு
செரிக்க முடியாமல்
மேடையில் வெளிச்சத்தைக் கக்க

மினுங்கும் உடைகளுள்
புதைந்த உடல்களோடு
வெளிப்படுகிறது பொய்மை
பொய்யைத் துப்பிப்
பின்னும் வலைகளில்
புலன்களையடக்கும் பூச்சிகள்

மோகப் போதையில்
வறுமையை முகிழ்தெடுக்கப்
போதையும் புழங்கும்

கரைவேட்டி கையசைக்க
அரைக் கோவணமும்
அசைகிறது அனிச்சையாய்

சிலநூறு ரூபாய்களுக்கும்
ஒரு வேளை உணவிற்கும்
விற்கப்படும் தேசியம்

தனியுடமை
விதைத் தறுத்த
விலையுயர்ந்த யுக்தியில்...
ஒளிவெள்ளம் எமை நோக்க
பாலிற்குப் பசித்தழும்
குழந்தையையும் மறந்து
ஓளிப்படத்திற்காய் அசைகிறது கை

எவனையோ தெரிவு செய்ய
எம்மையே தொலைத்த
கூட்டமொன்று,
மூலை முடுக்கெல்லாம்
கொடிகட்ட ஓடியலைகிறது
நிர்வாணமாய்

முள்வேலிக்குள் அவர்கள்
கூக்குரலிட்ட காலம் மறந்து
இவர்கள் அவனுக்காய்க்
குலவையிட
மீண்டும் அறுவடையாகும்
நம்மினம்...ஜனநாயக அடிமைகளாய்


02.
வெல்லத் தமிழினி தாகும்
----------------------------

தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே

சொல்வதற் கரிய கனிமை - மொழியில்
கொல்வதற் கரிய உயிர்மை - போரால்
வெல்வதற் கரிய வாய்மையின் கூர்மை
கொண்டதே தமிழ்த் தாயின் பழமை

இலக்கிய நகைகளை அணிவாள் - படைப்பில்
இலக்கணப் புன்னகை மலர்ப்பாள் -ஆக்கச்
சிறப்பினை ஓசையால் உரைப்பாள் -கேட்போர்
உள்ளத்தை மெதுவாய்க் கரைப்பாள்

நல்லோர் நாவில் சரசம் புரிவாள்
நல்மனத் தோர்க்கெலாம் கலசம் அருள்வாள்
வன்மங்கள் கண்டு பொங்கியே எழுவாள்
வாடிடும் உயிர்க்கெலாம் அன்பினைப் பொழிவாள்

கயல்விழி மாதர் அழகெலாம் அழகா
கண்டவர் மேற்கொளும் காதல் நிலையா
இயலிசை, நாடகம் மூன்றையும் உயிராய்க்
கொண்டவர் சிறப்பே என்றும் அழியா

தமிழினி அழிந்தே போகும் - எனும்
தறுதலைத் தலைமைகள் வேகும் தீயில்
மடமைக் கருத்துக்கள் மாண்டே போகும்
மாரித் தவளைகள் கத்தியே ஓயும்

தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் - கற்றால்
தளரவே மாட்டாய் மூப்பால் - சிறிதாய்
நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் - நாளை
நீயும் சுரப்பாய் கவிப்பால்

குழலிசை தனிலும் இனிமை - எங்கோ
குழந்தையின் நாவில் உயிர்மெய் -சில
மடந்தையர் கொஞ்சும் மொழிபொய்-இந்த
மடமையை அழித்தே தமிழ்செய்

மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்
உலகையே செம்மொழி ஆளும்
உவப்புநாள் விரைவிலே கூடும்

வெல்லத் தமிழினி தாகும் – இன்னும்
வெகுவான கலைச் சொற்கள் கூடும்
சுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்
சுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்

செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு
எருவாக மாண்டே தான் போகும்- எனும்
கள்ளத் தலைவர் தம்மெண்ணங்கள் மாறும்
தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்

சுட்டாலும் தமிழெமக்குத் தெரியாதென்றோர்
சுடு பட்ட புழுவாக துடித்தே வாழ்வீர்
நட்டாலும் நேரான மரமாய் வழர்வீர்
நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனைத் தாரீர்

சோதர மொழிகள் கலவை யின்றி -நாளும்
சோற்றிற் காய்த் தமிழைப் பேசும் காலம்
நரம்பில்லா நாவிற்கு வந்தே தீரும் -மூடா
நம்செவிகளிலே தேனாறாய்ப் பாயும்

வீட்டிற்கு ஒருவர்க்குத் தறிகள் தந்து
பாட்டிற்கு அத்தறியில் கவிதை நெய்வோம்
மாட்டிற்கே தமிழுணர்வு வந்த நாட்டில் தமிழறியா
மாடென்று உமையேச மனசே வெட்கும்


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 
இவருக்கான விமர்சனம்
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்... [நிந்தவூர் ஷிப்லி]




சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்