|
|
|
|
|
|
|
|
|
|
|
நீசத்தன நாட்டியம்
----------------------------
ஓகோவெனும் பொய்களின் முன்னர்
ஓலமிடும் உண்மை வாயடைக்கிறது.
மாலை பொன்னாடைப் போர்வையில்
கூடும் வாசனையுலகை மயக்குகிறது.
சிரிக்கும் உதடுகளால் சிந்தி
சிமிட்டும் கண்களால் விரிந்த
சுற்றறிக்கைப் பொய் வார்த்தைகளில்
சிதறியொழிகிறது பெரும் உண்மைகள்.
வாய்பந்தலோடு வாலாட்டும் பல
பொய்ப் புகழ்ச்சிகள் உண்மையை
நிர்வாணமாக்கிக் கண் மூடி
நீசத்தனமாய் நாட்டியமாடுகிறது.
அரிச்சந்திரப் பாதை மாறி
அடியெடுக்கும் ஆலவர்ணப் பொய்
விசிறிகளுக்குத் தானே உலகில்
ஆரத்தியும் ஆரவார வரவேற்பும்!
ஈழவரை நம்ப வைத்து
ஈவிரக்கமற்று அவர் வாழ்விடத்தை
ஈனத்தனமாய் அபகரிக்கும் நன்மையற்ற
ஈழவரையழிக்கும் பொய் அழியாதோ!
இது எத்தனை நீள நாடகம்!
பொது உண்மையெதுவெனத் தெரிந்தும்
மெதுவாக அங்கீகாரத்துடன் அரியணைக்காய்
ஒதுங்கி நகருகிறது அநியாயம்!
7-6-2009.
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|