|
|
|
|
|
|
|
|
|
|
|
நான், எனது மகள்
-------------------------
அவர்கள் இவர்கள் என்று
எல்லாருமாய்
உருவகித்த என்னில்
இப்பபொழுதெல்லாம்
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
எங்கேயாவது
மிச்சம் இருக்கிறதா
நான்?
மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேடமாட்டாள்
அவளை
அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படட்டும்
அவளது கைகளால்
காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு
அவளுக்குக் கொடுக்க
என்று!
- கவிதா நோர்வே
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|