Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2013-08-29 
picture for poem
நியாயத்தி.. முத்துமழை.. அட்சரா
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
நியாயத்தின் திசை.. முத்துமழை.. அட்சராப்பியாசம்

01.
நியாயத்தின் திசை
------------------------------


நியாயத்தின் திசையை
அவள்
எப்போதும் திரையிட்டு மறைக்கிறாள்

தனக்கான திடீர்க் குறுக்குப் பாதையில்
சுகமாய்ப் பயணிக்கிறாள்

தன் பலவீனங்களை
இரும்புக் கவசமிட்டுப் பாதுகாக்கிறாள்

தன் தவறான முடிவுகளின் மேல்
அவள்
மறு பரிசீலனையை
அனுமதிப்பதேயில்லை

சங்கடங்களை விரும்பியே
தோள் சுமந்து போகிறாள்

பொய்களை அணிகலங்கலாய்
அணிந்து அணிந்து
அழகு பார்க்கிறாள்

இழப்புகளின் முன்
மௌனமாய் நிற்கிறாள்
தான் கரைவது அறியாமல்...

உறவினர்களின் முட்கரங்களோடு
இனிதே
கை குலுக்குகிறாள்

அவள் நாட்கள்
இப்படியே கழிகின்றன
நியாயத்தின் திசையைத் திரையிட்ட படி...



02.
முத்துமழை
----------------------

உன்னிடம் சொல்ல நினைத்து
நான் சொல்லாத ஒன்று
கணந்தோறும்
மனத்தில் உறுத்தி உறுத்தி
நெடுநாட்கள்
புதைந்தே கிடந்ததால்
ஒன்று ஆயிரமாகி
சிறகுகள் முளைத்து
பூமி கிழித்து மேலே வந்த விதைகள் போல்
என்னை மையப்படுத்தி
மனப்பிரந்தியம் முழுவதும்
சுற்றிச்சுற்றி அலைகின்றன

காலூன்ற நிலம் தேடும்
தவிப்பிலான என்முன்
உன் வலிய கரம்
என் மென்கரத்தை யாசித்துப்பெற
நீ முத்தமிடுகிறாய்

அப்போது என்னுள் பறந்த
முத்துகள் எல்லாம் சிறகிழந்து
மழையாய்ப் பொழிந்து
நம்மை ஆசீர்வதிக்கின்றன
முத்துமழை
தொடர் முத்தமழைக்கான
இனிய சமிக்ஞை போல்...



03.
அட்சராப்பியாசம்
---------------------

அப்பா தோளில் அமர்ந்தபடி
அவர் தலையை
இறுகப்பிடித்துக் கொண்டு
நான்
பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன்!

உயிரெழுத்து மெய்யெழுத்து
மட்டுமே எழுத்தாணியால் எழுதப்பட்ட
மஞ்சள் தடவிய
பனை ஓலைச் சுவடி
அப்பா கையில்..

சென்ற வாரம்தான்
என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்

வாழையிலையில் நெல் பரப்பி
மாணவர்கள் ஆசிரியர்கள் சூழ
ஸ்ரீநிவாச ஐயர்
என் விரல் பிடித்து
'அ' எழுத
என் கவனம் எதிரில்
பித்தளைத் தாம்பாளத்தில்
பொட்டுக் கடலை - நாட்டுச்சர்க்கரைக்
கலவையில் இருந்தது!

ஒரு வாரம் முழுவதும்
மனம் வீட்டில் இருக்க
உடம்பு மட்டும்
பள்ளிக்கூடம் போய் வந்தது

பதினோரு மணிக்கு
சிறுநீர் கழிக்க அனுமதித்த நேரத்தில்
நான் வீட்டில்...



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[1]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (1)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்