Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-09-05 
picture for poem
துடிக்கின்றது.. என்னவள்.. பெறுமதி
கமல்ராஜ்
துடிக்கின்றது என் காதல்.. என்னவள் எங்கே..? பெறுமதியற்றவன் காதலன்

01.
துடிக்கின்றது என் காதல்
-------------------------------

வாடாத மலராக
வயதுக்கு வந்த இதழே..!
வாலிபம் துள்ளுதடி-எனக்குள்
ஏதேதோ பண்ணுதடி....

வார்த்தைகளை உச்சரிக்க
நாக்குத் துடித்தாலும்
பார்வையிலே நான் மயங்கி
புதுமையாய்ப் பார்க்கின்றேன்,
பாவாடைத் தேருன்னை.

யாரென்று அறியாமல்
யாசித்தாலும்
உன்னைத்தான் நேசிக்கின்றேன்.

அட்சயப் பாத்திரமாய்
குறையாத உன் புன்னகையில்
புதையுண்ட காதலை
சம்மத நீரூற்றி
வேரோடு விழுதாக
விருட்சமாய் வளர்த்து விடு.

விழிகளுக்குள் விதைகளை
பார்த்தவுடன் விதைத்து விட்டேன்.
உரமாக உன் பதிலை
உயிராகக் கேட்கின்றேன்.

உள்ளவரை நேசிப்பேன்
உயிராக சுவாசிப்பேன்,
சம்மதம் தந்து விட்டால்
உனக்காக உயிர் வாழ்வேன்.


02.
என்னவள் எங்கே..?
-----------------------------

முகம் வாடி வருகிறது தென்றல்
அவள் முகம் காணாது......

முற்றத்துக் கோலம் சிதைந்து
எறும்புகள் விருந்துண்ணையிலே
புள்ளிவைத்த சித்திரம்
சிறைவைக்கப் பட்டதுவா?

திசை மாறிய தென்றல்
அவள்
சடைகளை தீண்டாமல்
சடையின் வாசம்
சலனப் படுமே
சாமத்தியம் அறியாமல்.

தூது செல்லும் தென்றலில்
எத்தனை தூசிக்கள்....
தூசிக்கள் வடிவிலும்
அலைகின்றது துன்பங்கள்.

காத்திருக்கும் பொழுதெல்லாம்
கற்பனையோ அவள் மீது,
தனிமையில் மட்டும்
கண்ணீர்தான் என்னோடு.

காதலில் தோற்றவன்
முழுமனிதன்.
வெற்றிகள் கண்டவன்
அனுபவம் குறைந்தவன்.

கம்பிகள் இல்லாத சிறை வாசம்
காதலில் மட்டும்
அனுபவம் தன் புத்தியைத் தட்டும்.

அறியாத காதலுக்கு
அனுபவமே வெற்றி.
அவளைக் காணாத போது மட்டுமே
உணர்கின்றது புத்தி.


03.
பெறுமதியற்றவன் காதலன்
-------------------------------

இதயத்துள் மெத்தையிட்டு
உயிரினுள் நிழல் பிடித்து
உனக்காக காத்திருந்தேன்.
நீயோ.....!
துணையோடு இணையாக
என்னருகில் வந்துநின்றாய்.

கண்களில் மழையடிக்க
கால்கள் தானாய் உதறிக்கொள்ள
கன்னத்தில் கைகள் வந்து
கதையேதோ பேசுதடி...

எண் திசையும் எப்படித்தான்
என் கதை பரவியதோ..?
தேவதாஸ் பட்டியலில்
தேடாமல் ஒரு வாய்ப்பு
தேடி என்னை வருகின்றது....

புன்னகையாய் நீ வந்து
புயலாகச் சென்றாய்
புழுதியெல்லாம் என்னில் குவிந்து
தடம்மாறிப் போனேன்

தெருவோரச் சிலையாக
வெப்பம் தாங்கும் கள்ளிச் செடியாய்
நீயின்றி வாழ்கின்றேன்.
வெண்மை முகிழுக்குள்
காரிருளாய் இணைகின்றேன்.
கவலைகளை மறைத்து
மழையாக கண்ணீர் சிந்த.

துண்டாய் உடைத்த மனதை
தேடி எடுப்பது எங்கே..?
தெருவோர நாய்களெல்லாம்
ஒன்றுசேர்ந்தது அங்கே.

எத்தனை கேள்விகள் என்னிடம்
உன் பெயரைக் கேட்டு
இராணுவ இரகசியமாய்
பூட்டி வைத்தேன் கனவோடு சேர்த்து.

பெறுமதி இல்லாத சதங்களாய்
எங்கோ அலைந்து திரிகின்றேன்,
நிழலைப் பிரிந்து
நினைவோடு வாழ்கின்றேன்.



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[1]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[2]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (2)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்