யார் கொடியவர்கள்?.. காத்திருக்கின்றது
01.
யார் கொடியவர்கள்?
---------------------------
பெண்ணாக பிறந்து
பெண்ணை விரும்ப வைத்த
இயற்கையின் கொடுமை
எதற்கு எனக்கு?
எல்லாவற்றையும்
இலகுவில் மறக்கலாம்
என்று கூறுபவர்,
நிலை உணர்ந்து தான்
இப்படி கூறுகிறார்களா?
இவர்கள் இயற்கையை
விட கொடியவர்களாயிற்றே!
அப்படி தான் நினைத்தேன்
ஒரு பொழுது! - ஆனால்
விரும்பியவளின்
அன்பே கிடைக்காத போது,
அந்த காதலை வேறு வழியின்றி
கைவிட வேண்டிய நிலை
மட்டும் எம்மாத்திரம் !
இப்போது
யார் தான் கொடியவர்கள்?
02.
காத்திருக்கின்றது..
------------------------
உன் விழிகளில்
இனம் தெரியாத மின்னல் கண்டு
என் கண்கள் கூசாதா?
இவ்வுலகில் தொலைந்து நிற்கின்ற எனதுயிரின் ஆத்மா
என் கண்களினூடு எட்டிப் பார்த்து உன் அன்பை தேடுகிறது
ஓ! என அழுகிறது ஜீவாத்மா. எடுத்துறைப்பதற்க்கு
வார்த்தைகள் இன்றி தவிக்கிறது.
இருந்தும்,
இந்த உயிர் கொண்ட உடலால்
ஆத்மாவின் கீதத்தை இசைத்து
உன்னிடம் தஞ்சம் புகுகிறது.
வாழ்வின் எல்லையில்
உன் ஆத்மாவோடு
என் ஆத்மா சேர்ந்து கரைய காத்திருக்கிறது.
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
கருத்துக்கள் (2)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|