Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-01-01 
picture for poem
வரலாற்றை வாழ்தல்
வே.தினகரன், பத்தனை
  இவரின் பிற கவிதைகள்
 
வரலாற்றை வாழ்தல்
----------------------------

வெளிப்படையில்லா
விரோதத்துடன்
முகம் நோக்க முடியா
முகங்களுடன்
நமை கடக்கின்றோம் நாம்.
உன் பிள்ளைக்கு நானும்
நம் பிள்ளைகளுக்கு நாமும்
துணையாய் இருந்தது பற்றி
சிந்திக்க வேண்டாம்.
எனது மனைவியின் பிரசவத்திற்கு
உனது மனைவியின்
தாலியை அடகு வைத்து
உதவியது பழைய கதையாக
இருந்து விட்டு போகட்டும்.
வெசாக் தோரண மகிழ்வில்
நம் குழந்தையர் கூடி
மகிழ வேண்டாம்.
ஹனிபாவின் குழந்தை
பூச்சூடி அழகு பார்த்ததை
நாம் கூடியிருந்து மகிழ்ந்ததை
மீட்டவும் வேண்டாம்.
நத்தாரில் அந்தோணி குடும்பம்
அளிக்கும் இனிப்பும்இ பரிசும் பற்றி
முடிந்தால்
ஓரு காலத்தில்….. என
பேரர்களுக்கு கதை கூறுவோம்.
நாட்டின் பேரால்
தேபக்தியின் பேரால்
இன மதத்தின் பேரால்
பகிர்வை பகிர்வு செய்து விடுவோம்.
பலகாரமும் பாற்சோறும்
வட்டிலாப்பமும் கேக்கும் செய்து
நாம் நாமே தனித்தனியாய்
சாப்பிட்டுக் கொள்வோம்.
கூட்டு வாழ்வை உடைத்து
குழந்தைகட்கு கொடுத்திருக்கும்
விளையாட்டுத் துப்பாக்கிகளை
மீளப் பெறவேண்டாம்.
விட்டுக் கொடுப்பிலா
வேலிச் சண்டைகளுக்கு
வீரர்களை தயார்படுத்த
வெறும் பழி நமக்கு வேண்டாம்.
வரலாறு நமை
தண்டிக்கவும் வேண்டாம்
நமை இழந்த துயரால்
நமக்குள் இருந்து
வாழ்ந்து விடவும் வேண்டாம்.



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  நிர்வாணி   நாடு   Canada
தளம்
    திகதி   2010-01-08
[1]
அருமை.
 
பெயர்
  அமுதன்   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2010-01-10
[2]
அருமையாக எழுதுகிறீர்கள். ஞானம் மலரில் உங்கள் ஆண்டு அனுபவிச்ச கதை கவிதையை வாசித்தேன். இலக்கிய அமர்வில் அதுபற்றி விமர்சித்தேன். அந்தக் கட்டுரையை இங்கு காணலாம். http://amuthan.wordpress.com/2010/01/11/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[3]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[4]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (4)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்