Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
சீதாயணம்
  - சேதுபதி





சீதையின் நெருப்புக் குளியலும், சிவகாசி
நெருப்புப் பெட்டியும்



சீதாயணம் (நெடுங்கவிதைகளின் தொகுப்பு) ஆசிரியர்
சேதுபதி, வெளியீடு - கபிலன்பதிப்பகம்,
12, 7வது குறுக்குத்தெரு, பாரதி நகர், புதுச்சேரி,605 008,

விலை ரூ 60,



கவிதைகள் நெருக்கமானவை. கவிதைகள் படைப்பாளனின் நெஞ்சத்தையும் படிப்பவனின் நெஞ்சத்தையும்
நெருக்கமாக்கி உறவாடச் செய்யும். அதேநேரத்தில் கவிதைகளின் நெருக்கம் விரிக்க
விரிக்க , விரிவு பெறப் பெற புதுமை கொள்ளும். அதனால் கவிதைகள் நெருக்கமானவை.

இராமாயண அணைக்கட்டில் சீதை என்னும் நீர் சுழற்சி நெருக்கம் காரணமாக வெடித்துச் சிதறுகிறது.
அது நீராக காற்றாக வானாக மண்ணாக நெருப்பாக உருமாறி படைப்பாளர்களிடம் பல தரப்பட்ட
சிந்தனைகளைக் கீறிவிடுகிறது. கம்பன், தியாக பிரம்மம், விவேகானந்தர், ஜெயகாந்தன்,
சேதுபதி எனப்பல படைப்பாளர்கள் இராமனை சீதையை நேசிக்கிறார்கள். தரிசிக்கிறார்கள்.
ஏசுகிறார்கள். பேசுகிறார்கள். தொடர்ந்து இந்த இராமாணயம் என்னும் மூலப் பொருள் பல வேதிமாற்றங்களுக்கு
உள்ளாகிக் கொண்டே வருகிறது.

இராமாயணம் என்னதான் சொல்கிறது... பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியில் போ என்கிறதா.
. . போகாதே என்கிறதா. . . போனால் என்ன ஆகும் . . . என்ன ஆகவேண்டும் . . . ஏன்
ஆகவேண்டும் ... பெண்ணைத் தனியே வை என்கிறாதா. . . பெண்ணை மீட்டு எடு என்கிறதா. . .
இன்னும் எதிர்வரும் காலங்களுக்கும் கேள்விகளுக்கும் இராமயாண மூலப் பொருள் கருத்து நல்கும்.

அவ்வகையில் இராமயண மூலப்பொருள் தந்த புதியதொரு வேதி வினைமாற்றம் சீதாயணம் என்னும்
கவிநூல். கம்பன் கவிதையை உள்வாங்கி, வெளிதள்ளி, அகம் கண்டு, புறம் நோக்கி தீப்பெட்டிக்குள்
உறங்கும் நெருப்புக் குளியலை கவிதைச்சூடாய்த் தருகிறது. இதில் விமர்சிக்கப் படுவது இராமன்
அல்ல. சீதையும் அல்ல. கம்பன் மட்டுமே. கூடவே தமிழும். பாரத மண்ணும். பாரதப் பண்பாடும்.

சீதை வேலைக்குப் போகிறாள்.
மாருதி வந்து தூக்கிப் போகிறது
சம்பளம் கொடுப்பது இராவணக் கம்பெனி
(ப 125)

என்ற இந்த மூன்று வரிக்குள் இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகம் அதன் பண்பாடு அதில் வேலை
பார்க்கும் பெண் பிம்பம் அனைத்தும் தொட்டுத் துழாவப் படுகின்றன. சீதை என்பது பெண்ணுக்கான
குறியீடு. மாருதி என்பது அகில உலக அளவில் கிளை பரப்பி வரும் ஓர்அலுவலகத்தின் இந்தியக்
கிளைக்கு இரவுப் பகுதி நேரப் பணிக்குப் போகும் பெண்ணை ஏற்றிச் செல்ல வந்த வாகனம் அதாவது
Maruthi 800. அதே நேரத்தில் மாருதி என்பது அனுமனுக்கு மற்றொரு பெயர். அவன் தோளில் ஏறு இராமனிடம் அழைத்துப் போகிறேன் என்று கூறிய போது இல்லை இல்லை இராமன்
வருவான் அவன் வந்து அழைத்துப் போனால்தான் மரியாதை என்று கூறிய சீதை இன்றைக்கு நாளொரு
வண்டியில் பயணம் போகிறாள். ஏதோ ஒரு நாளில் சாலை ஓரக் கிழிசலாய் எரியப் படுகிறாள்.

அந்த அகில உலக நிறுவனத்தின் குறியீடு இராவணக் கம்பெனி. இப்படிப் பல நெருப்புகள் இந்நூலில்
சுடுகின்றன.

மற்றொரு கவிதை சுனாமிப் பேரலையை உவமையாக்குகிறது.
சேதுபதி இந்தக் கவிதையை எழுதும்போது
சுனாமிப் பேரலையை நேரில் சந்தித்திருப்பாரோ என்னவோ (ஏனென்றால் சேதுபதி வாழும் ஊர்
பாண்டிச்சேரி) ஆனால் சுனாமி அவர் கவிதையில் கடல்வண்ணமாய் வருகிறது. நெய்தல் தலைப்பில்
கடல் பாடுகிறது (ப. 53)


எங்கெல்லாம் அநீதி ஆட்சி புரியுமோ
அங்கெல்லாம் வந்து அசுரப்பசியுடன் விழுங்கிப் பூமியைப் புதிதாய்ச் சமைப்பேன்,
பிரளயம் என்று உலகம் பேசும்
அது நிகழும் முன்னர் நீங்கள் திருந்துங்கள்


என்ற இந்த கவிதையைச் சேதுபதி சுனாமி என்ற பெயரை நாம் நீர்ப்பிரளயத்திற்குச் சூட்டு
முன்னர்தான் எழுதியிருக்க வேண்டும். பிரளயம் வருமுன் அல்லது வந்தபின் நாம் அல்லது நீங்கள்
திருந்த முடியுமா இயலுமா திருந்த வேண்டும் என்ற தவிப்பை உங்கள் நூல் தருகிறது.

தீயையே எரித்த தீயையே சீதையாய்
ஆக்கிய கம்பனுள் அடந்த தீ கவித்தீ
பாக்கியில்லாமல் ஏன் படிப்போரைச் சுடவில்லை
(130)

என்ற கேள்வி உங்களை கம்பன் கவி அல்லது இராமாயணக் கருத்து சுட்டிருக்கிறது என்பதைத் தௌவாக்குகிறது.
உங்களிடம் ஏற்படுத்திய இந்த பாதிப்பு கம்பனுக்கு வெற்றி., படிப்போரில் ஒருவர்க்கேனும்
அந்த தீப் பொறி உரசலை உண்டாக்குகிறது என்பதற்கு நீங்கள் ஒரு சான்று. இதுபோல உங்கள்
கவிநூலுக்கும் பின்விளைவு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மற்றபடி படிக்கும்போது சோர்வு ஏற்படாமல் கீழேவைக்க விடாமல் கைகளை இந்த நூல் கட்டிப்போட
வைக்கிறது. சொல்வளம், நடை, ஓட்டம் அனைத்தும் இதற்கு கைகொடுக்கின்றன.

காப்பியங்களில் யாப்பு வடிவம் மாறுகையில் வேறு என்று தலைப்பிட்டு நூலைச் செய்வது முறை.
அவ்வகையில் மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் மாறி மாறி இந்நூலில் உலா வருகின்றன. அந்த
அந்த நேரத்தில் அவை அவை சுவையூட்டுவன என்றாலும் ஒரு இடையீடு இருப்பதாக உணரமுடிகிறது. இவற்றிற்கு
இனி வேறு என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தினால் உங்களைப் போன்ற மரபும் தெரிந்த
புதுக்கவிஞர்கள் மேலும் கவனிக்கப் படுவார்கள்.

மு. பழனியப்பன், புதுக்கோட்டை
palaniappan

மு. பழனியப்பன் எழுதிய பிற விமர்சனங்கள்
red angle கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்