Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
றஞ்சினி கவிதைகள்
  - றஞ்சினி


றஞ்சினி கவிதைகள்
-- செ.க.சித்தன்'உன் முத்தங்களுக்காக என் உதடுகள் தவிக்கின்றன'


றஞ்சினியின் கவிதைகள் மிகத் துலக்கமானவை. உணர்வின் நேர்மையை மிக நிர்வாணமாகச்
சொல்பவை. தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே
இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை என்கிற கோசத்தனம் இல்லை.
கவிதைகளும் அவை பிறந்த தூண்டல்களும்
விடுதலையேயாகி நிற்கின்றன. சில கவிதைகள் உணர்வின் அதியுச்ச வீச்சை வெளிப்படுத்துகின்ற
அதேவேளை சில, வெறுமனே வசனத்தின் இடம்மாறிய சொற்களின் கூட்டாமாகவே இருக்கின்றன. 
'இனிய நண்பனுக்கு' என்ற கவிதை தொடக்கம் 'ஓவியனுக்கு..' என்ற கவிதை வரை இவரது இந்த முதலாவது
தொகுப்பில் ஐம்பத்தியொரு கவிதைகள் இருக்கின்றன. புத்தி, அழகு, அறிவு அவற்றின் மீதான
ஒரு ஆணின் அங்கீகாரம் என்பன எவ்வளவு அபத்தமானவை, பொய்யானவை, கோணலானவை என்று எடுத்த
எடுப்பிலேயே சொல்லிவிடுகிறது இத் தொகுப்பு. மிகச் சாதாரணமான ; பேச்சு வழக்கின் பூரண
சொற்களாக இருக்கும் இது போன்ற கவிதைகள் சில பல வேளைகளில் ஒரு திடீர் வெட்டில் நுண்தளப்
புரிதலை வேண்டி நிற்கின்றன
என் இனிய நண்பனே
நீ என்னை அறிந்ததாகக் கூறினாய்
எப்படி என்றேன்; ஆத்திரப்பட்டாய்
உன்னிடத்தில் - என்னைச் சமப்படுத்திப்
பார்த்தாய்
பின் பரவாயில்லை புத்திசாலி என்றாய்
அறிவென்றாய் - கூடவே அழகென்றாய்
எதை எதற்காகச் சொன்னாய்?
இல்லை
உன்னால் என்னை அறியமுடியவில்லை
பெண் என்பதைத் தவிர


சில இனிப்பான கவிதைகள்.

'..ஆடை களைந்து அரவம் போல பின்னிப் பிணைந்து
திரண்டு புரண்டு கலவியில் கலந்து இமயம் சென்று
கரைகிறது காலை...
'

'என் ஜமேக்க காதலனுக்கு' என்ற கவிதையில் கறுப்புக் காதலனிடம் அவள் சொக்கிக் கிடப்பது
அழகிய கவிதையாகிக் கிடக்கிறது. ஜமேக்கப் பாடகர் பொப் மார்லியின் புகழ் பெற்ற பாடல்களில்
தெரிகின்ற பிரபஞ்ச நோக்கினைத் தன் காதலனிடமும் கண்டு லயிப்பது அது பொப்
மார்லியின் நிழல் உருவே என்றாகிறது.
'...முத்தமிடத் தூண்டும் உன் உதடுகள்
எனை வருடும் உன் திரண்ட தலைமுடி
என் தூக்கத்தைப் பறித்து விட்டது
...
உன் பாடல்கள் புரட்சியானது
...நான் கொண்ட காதல் வார்த்தைகளை மீறியது...
'

உடனடிப் பார்வையில் இவை கவிதைகள் தானா என்று கேட்கத் தோன்றும் போல் இருந்தாலும்
அவை சொல்கின்ற விடயங்கள் தமிழுக்குப் புதியவை. கவிஞனை; கலைஞனை; ஓவியனை; பாடகனை;
நண்பனை; புரட்சியாளனை; விடுதலையை நேசிப்பவனை கனிவிதயம் கொண்டு விரும்பி நிற்கும்
கலைமனக் கவிதைகள் இத் தொகுப்பில் பல உண்டு. இவர்களிடமிருந்து '...அன்பை எடுக்கவும்
அன்பைக் கொடுக்கவும் எமக்கிருக்கும் உரிமை பறிபோகாதவரை நாம் காதல் செய்வோம்.' என்று
அன்புமனம் காட்டி அனணத்து நிற்கின்றன. அன்பும் காதலும் கூடலும் வருடலும் இனிமையானவை தான்.
அதனால் பல பிரிதலின் துயிர் வாட்டி எடுப்பினும் அதன் யதார்த்த நிலையினைப் பல கவிதைகள்
பேசுகின்றன. '...உனது நெருக்கம் எனக்குத் தேவையாக உள்ளது ஆனாலும் என் அறிவு எம்மைப்
பிரிக்கிறது.' பண்பட்ட நவீனத்தின் பெண்மனப் படிமங்கள் இப்படி வெளிப்படுவது தமிழுலகுக்கு
முற்றுலும் புதியது.
இவை எல்லாமே ஆசிய மனங்களின் போலி வாழ்வின் பாவ்லாக்களை சாய்த்துவிடக்கூடியவை.


நன்றி : http://www.ciththan.blogspot.com/
மீள் பிரசுர உரிமை கவிஞர் அவர்களால் பெறப்பட்டது
 


நூல்: றஞ்சினி கவிதைகள்
வெளியீடு: இமேஜ் & இம்ப்ரெஷன் வெளியீடு, டிசம்பர் 2005
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
+91-44-24993448
uyirmai@yahoo.co.in
விலை: ரூ 40

 


 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்