Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்


வார்ப்பு இணையத்தளத்துள்
எதிகாவின் நான்கு கவிதைகள் கண்டேன். அற்புதமான கவிதைகள். கவிதைகள் உணர்வோடு பேசுவதில் வெற்றியடைகின்றன. 

தேயிலைச் செடியின் மேல் பனிக்கும் நீர்த்துளிகளின்மீதேறி முகில்களிடை கவிஞரால் பயணிக்க முடிகிறது. அதேநேரம் செடியில் படியும் கண்ணீர்த் துளிகளின்மீதேறி லயக்
கதவுகளினூடும் பயணிக்க முடிகிறது. தேயிலைக் கொழுந்துகளைக் கொய்யும் விறைத்துப்போன கரங்களையும் -தாய்வரவை எதிர்நோக்கி இருக்கும்- பிஞ்சுமுகங்களையும் அருகருகே வைப்பதின்மூலம் கவிதை வீச்சுப்பெறுகிறது. உண்மைதான். கவிஞர் சொல்வதுபோல் நம்மில் பலரின் கண்ணோட்டத்துக்கு அப்பால் வைக்கப்பட்டிருக்கும் மலையக மக்களின் வாழ்க்கை அவலங்கள் இன்னுமின்னும் பதிவாக்கப்பட வேண்டும். 

மனிதன் என்ற கவிதையில், மனங்களை அறிந்து ஆசை காட்டி மோசம் செய்யும் மனிதர்கள் நடுவே நாம் வாழ விடப்பட்டாலும், இன்னும் குரங்குத்தனத்தோடு வாழும் மனிதர்களிடையே நாம் வாழ விடப்பட்டாலும், வாழ்க்கையின் விழுமியம் அதைத் தாண்டியதுதான். மனிதன் குறைபாடுகளோடு மட்டும்தான் என்பதையும் தாண்டி மனிதனின் பெறுமதியை சுட்டும் இந்தக் கவிதை வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத்
தூண்டுகிறது. வரிகளின் கோர்வையாய், ஒரு தொடர்ச்சித் தன்மை கொண்டதாய் எளிமைப்பட்டிருந்தாலும் இந்தக் கவிதைக்குள் ஒரு கனம் ஏற்றப்பட்டுத்தானிருக்கிறது.

அடுத்த இரண்டுமே காதல் கவிதைகள். மனித மனங்களை உழவல்ல உணர்வுகள் காதல்வயப் பட்டவர்களுக்குக் கிட்டிவிடுகிறது. ஆனாலும் ஆண் பெண் என்ற உயிரியல் வகுப்புக்குப் பின்னால், மனித உணர்வுகளின் பொதுமைக்குப் பின்னால், சமூக மதிப்பீடுகள் மரபுரீதியாக ஏற்றப்பட்டு வளரும் கலாச்சார மனிதன் ஒளிந்திருக்கிறான். ஆண் அதிகாரம் செலுத்துபவனாகவும் பெண் அடங்கிப்போபவளாகவும் கட்டியமைக்கப்பட்டிருக்கும் சமூக அமைப்புமுறைக்குள் அவன் செயற்படுவதை காதல் தற்காலிகமாகவே குறுக்கிட முடிகிறது. மனித உணர்வுகளின் ஆழத்தை அது ஊடுருவ முடிந்தாலும் காலப் போக்கில் மரபு மனிதன் வெளிவந்து விடுகிறான். இந்த மரபுகளை தாண்டிப் போக இந்தக் கவிஞன் முயல்கிறான். 


'ஆணுக்குரிய குணங்கள் யாவும் 
என்னிடம் நிறையவே இருக்கின்றன 
ஆனாலும் ஏனோ உனைக் கண்டதும் 
இவை யாவும் செத்துப் போய்விடுகின்றன
'


என்ற வரிகள் ஒருவகையில் சுயவிமர்சனம்தான்.


காதலை வர்ணனைகளின் பின்னால் கொச்சைப்படுத்தும் காதல் கவிதைகளுக்கு எதிகா எதிர்நிலையில் இருப்பது அவரை சமூகக் கவிஞனாக உயர்த்துகிறது.
காதல்வயப்பட்ட மனத்திற்கு வார்த்தைகள் கனமானவை கொள்ளை கொள்ளையாய் அர்த்தம் தருபவை. கட்டியணைப்பது, முத்தமிடுவது, கண்ணீரைத் துடைப்பது போன்ற உடல் தொடுகைகள்
நரம்புகளனூடு ஏறி, உடலையும் மனசையும் இலேசாக்குபவை. இவை
'பகிர்தல்கள் என்பதற்குள் இயங்குபவை. காதலன் காதலியை அல்லது காதலி காதலனை
'எனது உயிர் என்பதற்குள் அடக்குவது பகிர்தல் என்பதன் எல்லையைத் தாண்டிவிடுவதாகவே நான் கருதுவதுண்டு. இது ஒரு மரபுவழிப்பட்ட சூழ்ச்சி நிறைந்த சொல்லாடலாகவே நான் கருதுகிறேன். நடைமுறையில் காதல் முறிவுகளில் ஏற்படும் தற்கொலைகளை சமூகவரைவுகள்தான் நிகழ்த்துகின்றன. கெஞ்சல், கொஞ்சல், எதிர்பார்ப்பு, வார்த்தைப்
பரிமாற்றம், குரல், நினைவுகள், சிறு சண்டைகள், அழுகை, ஆறுதல்... என்றெல்லாம் இந்தக் கவிஞனும் குழந்தையாகிவிடுகிறான் காதல் உணர்வில். இவைகளை அற்புதமாக தனது கவிதையில் சொல்லிவிடுகிறார். 'புதிய காதலர்களாய்
புதிய பயணத்தில் நானும் என் உயிரும்
என்று சொல்வது அவரது கவிதைக்கு வெளியே போய்விடுகிறது என்பது என் கணிப்பு. 


-- ரவி ( சுவிஸ் )


ரவி (சுவிஸ்) எழுதிய பிற விமர்சனங்கள்
red angle பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள்
red angle போராட்டத்தின் காயங்களைப் பற்றிப் பேசுவதே போராட்டத்துக்கு எதிரானவன் என்ற ஒற்றையிலக்கணத்தில் புதையுண்டோர்...
 
 
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்