Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
”என் எதேன் தோட்டம்”
கவிதை நூலில் இருந்து பறித்து வந்தவை

என் ஏதேன் தோட்டம் கவிதை நூலைப் பற்றிய சில கருத்துக்கள் யாழ் இணையத்தில் படித்த பின் அந்தப் புத்தகத்தை இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தேடிப் படித்ததில் பல சுவாரிசியமான அனுபவங்கள் எனக்குக் கிடைத்தது. தற்பொழுது நோர்வேயில் வசித்து வரும் கவிஞர் கவிதாவின் கவிதைத் தொகுப்புகளில் ”தொட்டிப்பூ” என்ற புத்தகமும் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
கவிஞர் ஆணா? பெண்ணா? வயது? வாழ்விடம் என்ற பேதங்கள் தவிர்த்து கவிஞரின் கவிதை உலகில் நுழைந்து பார்த்ததில் என்னால் முடிந்த அளவு முழுமையான எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

என் ஏதேன் தோட்டம்
என்னை மிகவும் கவர்ந்த வரிகளிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

கறுப்பு தேசம் எனும் கவிதையில் எமது மக்கள் நிலையை இத்தனை நுணுக்கமாக கூறுவதற்கு தேசத்தின் மீது ஆழ்ந்த பற்று இருக்க வேண்டும்.


”அவலங்கள் அலங்கரிக்கும்
தெருக்களுக்கு இப்பொழுதெல்லாம்
தெய்வங்கள் வருவதில்லை

இந்தத் தருணங்களில்
சிந்திக்க முடிந்தவர்கும்
செயல்பட முடிவதில்லை

என் தேசம் துளிர்விடும்
அந்த நொடி புகையும் மனதெல்லாம்
மேகமாகித் தூரலிடும்

அதை
எநதிக்கொள்ள வேண்டிய
கைகளெல்லாம்
இருக்க வேண்டித் தவம்
இருப்போம்”


”ஆடுகளம்”
என்ற கவிதையுடன் ஆரம்பமாகிறது என் ஏதேன் தோட்டம்.


”பாரதி பெண் நானில்லை
படைத்த பிரம்மனும் கூட
வரையறுக்க முடியா என்னை
சிந்தனை உளிகொண்டு...

என்னை நானே செதுக்கி
நிமிர்ந்து நிற்கும்
எனது பார்வையில்
பெண் நான்.


என்ற இறதி வரிகளில் பெண்கள் தம் சுயத்தில் வாழ்தல் பற்றிய முக்கியத்துவத்தை சிந்தனை இங்கே சுட்டிக்காட்டுவதாகவே தெரிகிறது. தனது ”கடவுளுக்கு ஒரு கடிதம்” ”கடவுள் வந்தார்” என்ற கவிதைகளிலே தனது மதம் சார்ந்த நாத்தீகத் தன்மை வெளிக்காட்டுவதுடன் உலகில் பல அழிவுகளுக்கு மதங்களே காரணம் என்பதை துணிவாகவே கூறியுள்ளார் கவிஞர்.


”சமப்படுத்தல் வேண்டும்
உயிரும் உருவும் உணர்வும்
உணர்வுகளை இன்னும்
அதிகப்படுத்தும்
மனிதர்களுக்கும்
உமக்கும்”


என்று கனவில் வரும் தன் கடவுளிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்.
காதலும் மோதலும் ஊடலும் கூடிக்கிடக்கும் இக்கவிதைத் தொகுதியில். காதல் என்னும் தருணங்களில் தென்றலாகி வரும் உணர்வுகள் சினம் கொண்ட தருணங்களில் புயலாகவும் பாய்கிறது.


என் ஏதேன் தோட்டம் என்ற கவிதையில்
சாத்தான்களும் சபித்துப்
போகின்றன என்னை
நரகத்தின் வாசல்
என் முன்னே கதவு திறக்கிறது

நான் இருந்துவிடுகிறேன்
இத்தனைக்கும் நடுவில்
நீ அருகிருப்பதாய்ச்
சொல்லும் ஒரு வார்த்தையில்”

”கண்ணா என்ற அழைப்பில்
காணமல் போகும் என்னுலகை
கண்டுபிடித்தெதற்கு வீணாக”

எத்தனைமுறை
என் நம்பிக்கையை நீ
சிலுவையிட்டாலும் அத்தனைமுறையும்
உயிர்த்தெழுகிறது
என் காதல் உனக்காக”


என்று உருகும் கவிதை ”முடிச்சுக்கள்” என்ற கவிதையில் தன்னை சுற்றி கிடக்கும் வலிகளை
எந்த வார்த்தையம் சிந்திவிடாமல்


உன்னையும் தாண்டி
பணயப்படும் எனது வாழ்க்கை
குற்ற உணர்வுகளை
இனியாவது தொலைக்கட்டும்


என்று பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும் அழுத்திக் கூறுகினறார்.


”நீ
நீ
என்ற நினைவுகளைக்
களையமுடியாமல்
சேர்ந்தே எரிந்து
போவேன் என்று சொல்பவர்
சொல்லட்டும்
பீனிக்ஸ் பறவை
பற்றி அறியாவர்கள்”


பதிபக்தி கடவுன் பக்தி என்ற எமது சமூகப் பெண்களில் இருந்து விலகி நின்று சுயசிந்தனை மற்று புலம் பெயர் வாழ்வின் பாதிப்பு, நவீன கலாச்சார புகுதல் போன்றவைகளும் இவருடைய கவிதைகளில் காணலாம்.

திருமணம் என்ற கவிதையில் மணவாழ்க்கையின் பின் தொலைந்துவிடும் காதலைப் பற்றி பேசுகையில் காதல் போன மணவாழ்க்கையைவிட காதலுடன் கூடிவாழ்வதே சிறந்தது என்று சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம் பற்றி அதன் சிறப்பு பற்றி ஒரு பெண்ணாக துணிந்தே கூறியிருக்கிறார். எம் சமூகத்திடையே இவை ஏற்றக் கொள்ளப்படுமா என்றது கேள்வியாகவே இருக்கிறது.


“நான் வரைந்த வட்டங்கள்
எனக்குப் பிடித்தே இருந்தன
அது நேர்த்தியானதும்
என்று அயலவர் கூறினர்
சிலர்
பாதுகாப்பென்று பறைசாற்றினர்
பலர்
செக்குமாட்டுத் தத்துவம்
பேசினர்”


என்று “செக்குமாடு” என்ற கவிதையில் வெளியுலகைத் தொலைத்த ஒரு பெண் காதல் தொலையும் போது தன்னை விடுவித்துக் கொள்ளுதல் பற்றி காரமாகவே கூறியிருக்கிறார்.
“என்னிடம் பெண்மை இல்லை” என்று தொடங்கும் கவிதையின் முடிவில் நீங்கள் நினைக்கும் பெண்மை என்னிடம் இல்லை என்று கூறுவது என்பது பெண்கள் சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணாக இருப்பதை விட தனது பெண்மையை தாமே உருவகிக்க வேண்டும் என்று தனது முதல் கவிதையின் கருத்தை மீண்டும் சொல்லிப் போகிறார் கவிஞர்.

தளத்தில் இருந்து வீரனாக தனது தாய்க்கு மகன் எழுதும் மடல் ஒன்று இங்கே வாசிக்கப் படுகிறது.


“அம்மா!
தாயா தாயகமா
முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில்
முதன் முறையாக என்னைப் பிரிந்தேன்

உன் கைக்கவளங்களை
நினைக்கும் போது மட்டும்தான்
இப்பொழுதெல்லாம் பசிக்கிறது

என் கண்களைத் திறந்தபடியே
புதைய விடு
இச்சாம்பல் பூத்தபூமியில்
ஒருநாள் பூக்கள் மலரும்
அதையேனும் நான் பார்க்க வேண்டும்”


தன் தேசத்தின் போராளியின் மனநிலையையும் கவிதையாக்கத் தவறவில்லை கவிஞர்.
தனது இறுதிக் கவிதையாக “மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்” 2008 ஆம் ஆண்டு பிறக்கப்போகும் புதிய ஆண்டிற்கு எழுதும் கடிதமொன்றையும் வாசகர்களுக்கு விட்டுச் செல்கிறார் கவிஞர்.


“நீயாவது
எமது வித்தில் இருந்து
மாற்றம் பெறு
எனது எச்சங்களையும்
தொடாதே நீ”


கோபத்தின் வெளிப்பாடுடைய பெண்ணாயும், துணிந்த சிந்தனையோடு செயல்படும் பெண்ணாகவும் காதல் உணர்வுகளில் தன்னை முழுமனதுடன் ஒப்படைக்கும் பெண்ணாகவும் அதேநேரம் கடவுளையும் நிற்கவைத்துக் கேள்விகள் கேட்கும் பெண்ணாகவும் இந்த ஏதேன் தோட்டத்துப் பெண் காட்சி கொடுக்கிறாள்.

ஆதாம் ஏவாள் கூடிக் காதல் கொண்ட ஏதேன் தோட்டமும். சாத்தான்களால் சபிக்கப்பட்டு நசுங்கிக் கிடக்கும் தோட்டமும் என் கைகளில் வந்து போன பிரமையுடன் நான். நீங்களும் கவிதாவின் ஏதேன் தோட்டத்திற்குள் உலாவி வாருங்கள்.

கவிஞர் கவிதாவினுடைய தொட்டிப்பூவுடன் முடிந்தால் உங்களை மீண்டுமொருமுறை சந்திகிறேன்.

-கவிதைப்பித்தன்

 
 
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்