Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
உணர்வுப் பூக்கள்
  - வேதா. இலங்காதிலகம் தம்பதி


இனிய நந்தவனம் இதழ் - பங்குனி 25 -2009 ல்- ஆங்கரை பைரவி.பொதுவாகவே வாசகத்தனத்தில் கவிதைகள் என்பது உணர்வுகளின் பிரவாகம் என்கிற கருத்து உண்டு. எழுகின்ற உணர்வுகளைப் படைப்பாக்கித் தரும் வல்லமை, தேர்ந்த படைப்பாளர்க்கு மட்டுமே சாத்தியம். இதை மனதில் கொண்டு, வேதா இலங்காதிலகம் அவர்களின் "உணர்வுப் பூக்கள்" தொகுப்பை வாசிக்கிறபோது, முதல் பாரா முற்றிலுமாகப் பொருந்துகிறது வேதா-இலங்காதிலகம் இருவருக்கும். அம்மா, அப்பா, தம்பி, தங்கை, உறவுகளை, ஒரே நடிப்பு நட்சத்திரமாக மிளிரும் நடிகர் திலகத்தை, மழை, நதி, அருவி என இயற்கையை… எல்லாம் ஒரு உணர்தலின் உணர்ந்ததின் கவிதைகளாகவே இருக்கின்றன. ஆரம்பப்பள்ளி மாணவனுக்கும் பிடித்துப்போகிற நடை, பிற மொழிக் கலப்பு இல்லாத தமிழ் வாசம், தொகுப்பு முழுவதும் மணக்கிறது. வேதாவின் கவிதைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு தளத்தில் பயணித்த கவிதைகளாக இருப்பது மகிழ்வைத் தருகிறது. பெரும்பாலும் வானொலியில் வலம் வந்திருப்பது நல்ல விசயம் தான். வேதாவின் கவிதைகளில், நாற்சார வீட்டில் மாட்டியது, தலைப்பிலான கவிதை நவீனத்துவ சாயலில் இருக்கிறது. மாதாழை, மழையிருட்டு போன்ற சொற்கள் கவிதைக்கான ருசியைக் கூடுதலாகத் தருகின்றன. அனைத்து உணர்வுப் பூக்களும் அன்பு வாசத்தின் அடையாளமாய் இருக்கையில் நூலுறவு, சாம்பலில் உதித்த அறிவுக்கதிர் ஆகிய இரண்டு கவிதைகளும் அறிவின் வாசமாய் இருந்தன. இந்த இரண்டு கவிதைகளையும் வர்ணிப்போடு நில்லாமல், எரிதல் தந்த வலியையும் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.(எரிந்த நூலகத்தை எழுதுகையில் வலிதான் பேச வேண்டும்). இந்தத் தோன்றலை இலங்காதிலகத்தின் சில கவிதைகள் முன்மொழிகின்றன. அன்னியக் காற்று, கனவு, பிணக்குழி, வாழ்வுக்காய் வதைபடுகிறோம், வதைபடுதலில் வாழுகிறோம் கவிதைகள் மெல்லிய வலியோடு பதிவாகியுள்ளன. "வாழ்வா சாவா போராட்டம், பூவா தலையா தடுமாற்றம்" நல்ல பதிவு. "யாழ்ப்பாணம்" கவிதையில் மெல்லிய வலி கூடுதலாகி இருக்கிறது. தமிழ் தேசியம் பேசும் "இரவல் தத்தம் இரவல் கொள்ளி" கவிதை இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது. உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள். வளரும் படைப்பாளிகளுக்கு இந்தத் தொகுப்பு ஒரு நல்ல வழிகாட்டி. வளர்ந்தவருக்கு இந்த நூல் பத்தோடு பதினொன்று. நல்ல தமிழ் சொற்கள் அடங்கிய தொகுப்பு.


இந்நூல் தொடர்பான பிற விமர்சனங்கள்
red angle காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன
pointஎன்.செல்வராஜா
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்