Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்
  - துவாரகன்மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்
- துவாரகன்
மதிப்புரை

போர்ச் சூழலிலும் இயற்கையின்பால் குதித்தோடும் கவிமனம்

- ராஜமார்த்தாண்டன்போரைத் திணித்தவர்கள்மீதான கோபத்தின் வெளிப்பாடுகளோ எதிர்த்துப் போராடும் போராளிகளின் அத்துமீறல்கள் குறித்தான விமர்சனங்களோ இல்லாத இன்றைய ஈழத்துக் கவிதைகளைக் (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் உள்பட) காணுதல் பொதுவாகவே அரிதாகிப்போன சூழலில், அவை தவிர்த்து, போரினால் ஏற்படும் அழிவுகளையும் மனச்சிதைவுகளையுமே வெளிப்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது துவாரகனின் ' மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்' தொகுப்பு. இத்தனைக்கும் இதிலுள்ள கவிதைகள் அனைத்தும் 1996 - 2008 காலப்பகுதியில் எழுதப்பட்டவையே. தன்னிரு மாமாக்கள் இளம்வயதில் போர்ச்சூழலில் சாவுகொள்ளப்பட்ட குறிப்பும் நூலில் உள்ளது.


'சின்னப் பூ', 'பேதம்', 'எங்களூர்க் கல்யாணம்', 'மனிதர்கள் போலவே' போன்ற பல கவிதைகளும் வெளிப்படையான - ஒற்றைப் பரிமாணம் கொண்ட - கவிதைகள்; வாசகர் பங்கேற்புக்கு அதிகமும் இடம்தராதவை. இந்தக் கவிதைகளின் வெளிப்படையான தன்மை மட்டுமே அதற்குக் காரணமல்ல என்பதையும் கவிதை வாசகர்கள் தெளிவாகவே உணர்ந்துகொள்ள முடியும்.


ஈழத்து மக்களின் இன்றைய மனநிலையை - அவர்களது நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் இரண்டுக்குமிடையிலான ஊசலாட்டத்தையும் 'மரம்', 'எல்லாமே இயல்பாயுள்ளன' என்னும் இரண்டு கவிதைகளும் மிகையேதுமின்றி இயல்பாகவும் சூசகமாகவும் கலைத்தன்மையுடன் வாசக மனத்தில் பதியவைக்கின்றன.


கூடவே 'வெள்ளெலிகளுடன் வாழ்தல்', 'எச்சம்', 'குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம் ...', 'யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்', 'கோழி இறகும் காகங்களும்' ஆகிய கவிதைகளே இத்தொகுப்பைக் கவிதை வாசகரின் கவனத்துக்குரியதாக்குகின்றன. இந்தக் கவிதைகள் இன்றைய ஈழத்தில் மனிதர்களின் அவல இருப்பைப் பல பரிமாணங்களுடன் வெளிப்படுத்துகின்றன.


ஈழத்துக் கவிதைகளில் பரிச்சயமுள்ள தமிழகக் கவிதை வாசகர்கள், இயற்கையின் மீதான ஈர்ப்பு அவர்களின் ஆழ்மனத்துள் இயல்பாகவே படிந்துபோன ஒன்று என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதனால்தான் மரணத்துள் வாழும் போர்ச் சூழலிலும் துவாரகனின் மனம், சலசலத்தோடும் வாய்க்கால் நீரில் முக்குளித்து எழுந்து சிறகசைக்கும் மைனாக்களைக் காணும்போது இலேசாகிவிடுகிறது. வால் நீண்ட அணில்களைக் காணும்போது,பின்னால்
வால் முளைத்துக்
குதித்தோடிவிடுகிறது

(குதித்தோடும் மனசு).


துவாரகனின் கவிதைமொழி மிகையேதுமில்லாத, உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத, இன்றைய கவிதைக்கான சமன்நிலை கொண்டதாக வெளிப்படுகிறது. அதன் பின்னே சாம்பலின் கீழ் தீக்கங்குகள்போல் உணர்வலைகள் கனன்று கொண்டிருப்பதையும் கவிதைகளில் உணர முடிகிறது.
உதவிக்கு யாரையாவதுஉரத்துக் கூப்பிடு
ஆனாலும் கவனம்
வருபவனும்கூட ...
(மனிதத்தைத் தேடி)
நான் இனி
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்

(வெள்ளெலிகளுடன் வாழ்தல்)


என்னும் வரிகளில், ஈழத்து மக்களின் இன்றைய அவல வாழ்க்கை பெருந்துக்கமாய் மனத்துள் கவிந்துவிடுகிறது.


 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்