Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
மருளில்லா மலர்கள்
  - கிளியனூர் இஸ்மத்


கவிஞர் கிளியனூர் இஸ்மத் தரும்
கருத்துப் புதையல்

இலக்கியம் படைப்பது எழிதல்ல. அது எல்லோராலும் இயலுமானதுமல்ல. முதலில் அதற்கு
இறையருள்
வேண்டும். இவைகொண்ட ஒரு படைப்பாளிக்கு ஆர்வமும் ஆற்றலும் ஒன்றி இலக்கியம் படைக்க
உதவுகின்றன.கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர்கள் தனது இளமைப் பருவத்திலேயே நாவல் சிறுகதைகள்
படைத்ததன்மூலம்
தன்னையொரு படைப்பாளியாக இலக்கிய உலகுக்கு இனங்காட்டிக் கொண்டவர். அவைகள் நூலுருப்
பெற்றுள்ளன.
இப்போது தன்னால் அவ்வப்போது எழுதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த
கவிதைகளோடு
புதிதாக எழுதப்பெற்ற சில கவிதைகளையும் சேர்த்து தனது முதலாவது கவிதைத் தொகுதியாக 'மருளில்லா
மலர்கள்' நூலினை கவிஞர் இஸ்மத் வெளிக்கொணர்கின்றார்.


பெரும்பாலும் கவிதைகள் மூலம் தம்மை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்யவிளையும்
படைப்பாளிகள் அழகியலில் அதிகம் அக்கறை காட்டுவதுண்டு. கவிஞர் இஸ்மத் அவர்கள் அதற்கு
முற்றிலும் மாறாய்ப் பெரும்பாலும் ஆத்மீகத்தைக் கருவாக்கிக்கொண்ட தனது
கவிதைகளைத்தொகுத்துத் தனது முதல் கவிதை நூலாக துணிந்து பதிவுசெய்கின்றார். இது
ஆத்மீகத்தில் அவருக்குள்ள இறுக்கமான பிடிப்பினையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்து
வதாகும். தமிழில் யாப்பிலக்கணம் கற்று அதன்வழி கவிதையும் கைவரப் பெற்றவர்களுக்கு
மரபுவழியில் கவிதை எழுதுவது மிகவும் எளிதாகும். தேவைக் கேற்ப எவ்வகைக் கருவையும்
எந்தவகை யாப்பையும் கையாண்டு அவர்களால் பாடிவிட இயலும். ஆனால் நவீன கவிதைக் கட்டு
அவ்வாறு எளிதானதல்ல. ஒவ்வொரு வார்த்தையும் தனக்காகப் பொருந்தும் இருப்பிடத்தைப்
பெற்றுக் கொள்ளாதவிடத்து உயிரிழந்து கவிதையும் உணர்வற்றுப் போகும். இத்தொகுப்பில்
கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு நவீன கவிதைவடிவம் சொல்ல வந்த கருத்தைச் சொல்ல பெரிதும்
உதவி இருக்கின்றது.
வெவ்வேறு தலைப்புகளில் மொத்தம் முப்பத்து மூன்று கவிதைகள்
இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. அனைத்தும் நவீன கவிதை உத்திகளைக் கொண்டவைகளே.
தொகுப்பின் முதற்கவிதையான 'இறiவா உன்னிடம்' என்னும் கவிதையில் கவிஞர் தன்னை
முழுமையாகவே இறைவனிடம் சமர்ப்பித்து விடுகின்றார். தான் அங்கத்தும் வகிக்கும்
ஏகத்துவ மெய்ஞான சபையின் மேன்னை பற்றிக் கூறுங் கவிதையில்

முட்களாய்
வீதியில் வளர்ந்த சிலர்
இங்கே
ரோஜாப் புஷ்ப்பங்களாய்
மலர்கின்றனர்


என்றும்

கற்களாய்க்
தரையில் கிடந்த சிலர்
இங்கு
வைரங்களாய்
ஜொலிக்கின்றனர்


என்றும் கூறுகின்றார்

ஞானம் கற்பது
ஞானியாவதற்கல்ல
மனிதனாய் வாழ்வதற்கு


என ஞானம் பற்றியும் நிம்மதி எங்கே என்று அலைபவர்களுக்கு இவரது நிம்மதி என்ற
கவிதையும் பதில்
சொல்லுகின்றன. அவரது மனிதா ! நாம்என்பது யார் ? என்றகவிதை மனிதநேயத்தைப் பற்றி மிகச்
சிறப்பாகப் பேசுகின்றது.

மனிதா !
மனிதநேயம் என்பது
தன்னைத்தான்
நேசிக்குமளவு
அனைவரையும்
நேசிப்பதாகும்


என்கிறார். அத்தோடு மற்றோரு கவிதையில்

துன்பமும் துயரமும்
மழையாய்ப்
பொழியும் வேளை
அதில்
நனைகின்றவர்களுக்கு

குடையாய் நிற்பதே
சகோதரத்துவம்

என சகோதரத்துவத்திற்கு உவமை சொல்கின்றார்.
'மதம் என்பது மனிதனை மனிதனாக்கும் பட்டறை' என்பது மதங்களின் வழிகாட்டலின் மேன்னையைக்
கூறும் வாசகமாகும். உடல் களிமண்ணால் ஆனது. உயிர் இறைவன் தன் ஆன்மாவிலிருந்து ஊதியது.
அவ்வாறாயின் நாம் என்பது யார்? என்று வினாத்தொடுப்பதோடு நாம் புதைக்கப்படுமுன்
நம்மிடம் புதையுண்ட இரகசியத்தை புரிய வேண்டும் என்றும் கூறுகின்றார். இது
ஆழமானஇபொருள் பொதிந்தஇசிந்திக்க வேண்டிய வரிகளாகும். இன்னும்
'இஸ்லாம் வாளால்
பரப்பப் பட்ட மார்க்கம்' என்று கூறிக் கொண்டிருப்போருக்கு மறுப்புரைக்க அவர்
'இஸ்லாம்
வாளால் பரப்பப் பட்ட மார்க்கம் அல்லஇஅது தன்னை வாளால் பாதுகாத்துக் கொண்டது' என்ற
கருத்தை தனது கவிதையில் மீட்டுரைக்கின்றார்.
 


' அறிவைத்தேடக் குருவைத்தேடு' என்ற கவிதையில் மனிதவாழ்வின் தொடக்கமுதல் இறுதிவரை
கல்விக்கற்றுத் தெளிவுபெற குருவின் அத்தியாவசியத்தை அழகாக் கூறியிருக்கின்றார்
கவிஞர் இஸ்மத் அவர்கள். சிறியசிறிய விடயங்கள் சமூகத்திடை பெரியபெரிய பிளவுகள்
தோன்றக் காரணங்களாகிவிடும் சீர்கேட்டைச் சாடும்கவிதை 'தொப்பி' என்னும் கவிதை.
பெருமானாரின் புகழ்பாடுவது பற்றிய 'புகழைப் புகழ் பாடு' என்றநீண்ட கவிதையில்
அன்னாரின் புகழ்பாடியிருப்பதோடுஇ நபிகளார் சொல்லித்தந்த வழியில் நாமும் அவர்கள்மேல்
'ஸலவாத்' சொல்லுவதன் சிறப்பையும் கூறுகின்றார். அது இறைவன் காட்டிய உயர்வழி . நன்மை
பயக்கும் நலவழி என்றும் சுட்டுகின்றார். திருக்குர் ஆன் பற்றிய கவிதைஇ குர்ஆனின்
உன்னதத்தை பல கோணங்களில் சுருங்குச் சொல்லி இருக்கிறார். 'ஏழையின் சிரிப்பில்' 'ஸக்காத்'
இன் கட்டாயத்தை உறுதிசெய்கின்றது.

இவர்களுக்குச்
சேரவேண்டிய சொத்து
நம் பத்தில்
பத்திரமாக


என்றும்

இவர்கள் நம்மிடம்
பிச்சை கேட்கவில்லை
அவர்களுக்குரிய
வரியைக் கேட்கின்றனர்.

என்றும் கவிதையில் அழகாக வெளிப்பட்டுள்ளன. அத்துடன் போராட்டத்தின் வகைகளைச் சொல்லி
அவற்றின் விளைவுகளையும் உண்மையான போராட்டம் என்பதற்கு விடையும் விளக்கமும்
கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனும் அவனது நப்ஸ் சுடன் போராடுவதே உயர்ந்த போராட்டம்
என்றும் புகல்கின்றார். 'மஹர்'கொடுத்துத் திருமணம் செய்துகொள்ளப்பட வேண்டிய
பெண்களிடம்இபணமும் பொருளும் கேட்டலையும் இழிநிலையை

இன்று
கன்னிப்பெண்கள்
மணவறைகாண
வாழ்க்கையின் நிர்ணயம்
சில்லறைக்குள்

பெற்றோர்களின்
சொல்லைத் தட்டும்
சில இளைஞர்கள்
திருமண விசயத்தில் மட்டும்
தீர்க்கமாய் தலை குனியும்
நாணிகள்

தீன் முறைப்படி
திருமணம் என்று
அச்சடிக்கப்படும்
அட்டைகள் பேசும்.
ஆனால்
ஆயிரத்து ஒன்றை
அளித்து விட்டு
பல
ஆயிரங்களைப் பறிக்கும்
அடுக்கு வட்டிகள்என்றும் பழித்துரை செய்கின்றார்.
அன்பு பற்றிய ஒரு அழகிய கவிதை. 'அன்னை அன்பைப் பொழியும் அட்சயபாத்திரம். அன்பின்
ஆரம்பப் பாடசாலை' என்று தாயன்பின் முதன் மையைச் சொல்லுகின்றார். அரசியல் பற்றி
ஆழமான ஒரு நீளமான கவிதையும் இத்தொகுப்பில் உண்டு. கலீபா உமர் அவர்களின் ஆட்சிச்
சிறப்புப் பற்றியும் இக் கவிதை பேசுகின்றது. இன்று தேர்தலில் வாக்களிக்கப் போகுமுன்
வாக்காளர்கள் தெரிந்திருக்க வேண்டிய பல நல்ல உபதேசங்கள் இக்கவிதையில் அடங்கி
இருக்கின்றன. இவை பதச்சோறுகளே. இவ்வாறு இத்தொகுதியில் பல கவிதைகள் நம்மைச்
சிந்திக்க வைக்கும் சிறப்புக்களைக் கொண்டன. மொத்தமாய் இது கவிஞர் கிளியனூர் இஸ்மத்
அவர்களின் பயனுள்ள முயற்ச்சி. வாசகர்களுக்கான அறிவுத்தீனி. கவிஞர் இதுபோன்று
இன்னும்பல தொகுதிகளைத் தழிழிலக்கியத்ற்கு சிறப்பாய் இஸ்லாமியத் தமிழ்
இலக்கியத்திற்குப் படைத்தளிக்க வேண்டுமென வேண்டி வாழ்த்துகின்றேன்.


டாக்டர் புலவர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்

இலங்கை

22-02-2008


 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்