Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
வேதாவின் கவிதைகள்
  - வேதா. இலங்காதிலகம்


வேதாவின் கவிதைகள். வேதாவின் முதலாவது நூல்

ஜேர்மனியக் கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் பார்வையில்.....

மாதா, பிதாவைப் பற்றியும் அவர்களுடன் மற்றவரையும் இணைத்து நல் வாழ்வு தந்த இறையை
வணங்கி நன்றியோடு சரணடைவதில் உங்கள் பக்தி பிரதிபலிக்கின்றமை பூரிப்பை
ஏறபடுத்தினாலும், குருவை நினைத்து நன்றி கூறாமை குறையாகப் படுகிறது.

அது என்ன குரலோ
-குழலினிது குறளை ஞாபகமூட்டும கவி;தை. கண்டு கேட்டு
உணர்ந்து துய்க்கும் அனுபவம் வரிகளில் வடிகிறது. ஏல்லோரையும் ஈர்க்கும் காந்தக்
கவிதை.

சூப்பி வைரம் - புலம் பெயர் வாழ்வியலின் புதினம் சொல்லும் கவிதை.
நறுக்கான செய்தியொன்று என்றாலும்

ஒளவைப் பாட்டி
-சிறுவருக்கான எளிய நடைக் கவிதை..
யதார்த்தத்தை விட்டு கற்பனை உலகில் சஞ்சரித்திருக்கும் முகவரி தேடும்
முகங்களுக்கு அறிவுரை சொல்லும் கவிதையாக இது அமைந்திருந்தாலும அனைவரையும்
சிந்திக்கத் தூண்டியிருக்கும்.

ஆற்றங்கரையினிலே..
-பிள்ளைப் பருவத்தைப் பிழிந்து வைத்த கவிதை. அனைவர்
வாழ்விலும் அடிபட்டுப் போன நினைவுகளை நிழலாடச் செய்தாலும் நீண்ட பெருமூச்சொன்று
வெப்பமாய் வெளியேறிப் போனதெனக்கு
-ஏக்கமாய்...

திருமணம் - கவிதையில் பொதுப் பார்வையில்லாது ஒரு பக்கச் சார்பாயிருப்பது
உறுத்தலாயுள்ளது. மாற்றுக் கருத்தை முன் வைக்க விரும்பாவிடிலும், ஆண்களில்
குற்றச்சாட்டு ஆண்டாண்டுகளாயிருப்பது தான் திருப்தியளிக்கவில்லை. பெண்களால்
சீரளிந்த திருமணங்களும் தீட்டப்பட்டிருந்தால் முழு வெற்றியடைந்த கவிதைப்
பட்டியலில் இதுவும் சேர்ந்திருக்கும் என்பது என் எண்ணம்.

செல்வியெனும்... - ஒவ்வொரு இளம் பெண்ணின் கனவுக் களஞ்சியத்தைத் திறந்து
காட்டிய கவிதையிது.

பாலபருவப் பாதிப்பு
-மனமுறிவுகளால் துருவங்களாகிப் போகின்ற பெற்றோரால்
பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பையும் மனத்தாக்கத்தையும் விளக்கியுள்ள
உதாரணங்கள் சிறப்பு. புலம்பெயர் வாழ்வில் மலிவாகிப் போன சமாச்சாரத்தை மண்டையில்
உறைக்கக் கூறியிருப்பதற்குப் பாராட்டுகள்.

தமிழே அமுதே
-தமிழைக் காக்கவும் பிள்ளைகளுக்குத் தமிழை ஊட்டவும் அறை
கூவல் விடுகின்ற போது எனது அணியில் இணைந்துள்ள உணர்வு. இன்னும் உரத்துச்
சொல்லுங்கள்! உறைக்கச் சொல்லுங்கள்!

மாளிகைப் பிச்சைக்காரர் - இயந்திர வாழ்வின் இன்னுமொரு குறக்கு வெட்டுத்
தோற்றம். விரும்பாமலோ விரும்பியோ விளைந்த வாழ்க்கை, வாழ்ந்தே ஆக வேண்டிய
வருத்தம் தொனிக்கும் கவிதை.

ஓவ்வொருவரும் சமன்பாடு காணும் ஞானக் குளியலின் அவசியத்தை அறிவுறுத்தி மூளைச்
சலவை செய்ய அழைப்பது அருமை. அந்நியக் கலாச்சாரத்தில் நம் தமிழும் கலாச்சாரமும்
அடிபட்டுப் போவதற்கு நம்மவர் மனங்களும் காரணமென்று இடித்துக் கூறுகின்ற
தைரியத்துக்கு என் பாராட்டுதல்கள்.

ஆராதனை -கற்பனையில் மிதக்கும் ஒரு ஆன்மாவின் மன நெருடல்களின் தெளிப்பு.

ஆச்சரியவிருந்து
-சுற்றலாய்ப் பின் விழிபிதுங்கிய சுற்றுலா ஆச்சரியம்.
 

 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்