Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
மௌனங்களின் நிழற்குடை
  - இசாக்

மழை திறந்த சன்னல்கள்
- பழநிபாரதி

காதல் நம் அம்மாக்களின் அம்மா.
சூரியனும் சந்திரனும் அவளது இரண்டு மார்பகங்கள்.
நம்மையெல்லாம் தூங்கவைக்க அவள் கட்டிவிட்டிருக்கிற ராட்சத தொட்டில்தான் இந்த
பூமி.
காற்று அவள் தாலாட்டு.
அவள் நம்மையெல்லாம் மழையால் குளிப்பாட்டி, மலர்களால் தலைதுவட்டி, மரங்களைக்
கிளுகிளுப்பைகளாய் ஆட்டி ரசிக்க வைக்கிறாள்; பசிக்க வைக்கிறாள்; ருசிக்க
வைக்கிறாள்.

அவள் பாலூட்டிக் கொண்டே இருக்கிறாள்..
முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாள்...
மூச்சு முட்டுகிறது என்று அவளிடமிருந்து நாம்தான் நம்மை ஒரு நிமிடம்
விடுவித்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்; அவளுக்கு அது சலிப்பதே இல்லை.

காதலின் அந்தத் தாய்க்குணங்களையும் பால் மணக்கும் மொழியில் கவிதைளாக்கி
இருக்கிறார் இசாக்.

"பிற்பகல் பொழுதில்
பெய்து கொண்டிருந்த மழையை
ரசிக்க
சன்னல் திறந்தேன்
நீயும் சன்னல் திறந்து நிற்கிறாய்
நான்
என்ன செய்ய
சொல்"


இந்த வரிகளில் காதல் அவர்களைக் கதவுகள் திறந்து அழைத்து வருகிறது. வெட்டவெளியில்
அவர்களை மழையின் குழந்தைகளாக ஆக்குகிறது. மல்லிகை மணக்கும் மெல்லிய இருட்டில்
மயக்குகிறது. ஒருவருக்கொருவர் மழையாகிற ஈர ரகசியத்தை அவர்களுக்குள் ஊற்றி
விடுகிறது.

"எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுவதென்னவோ நீ
என்ன
கொடுமை
அணைக்க முடியா நெருப்பாய்
கொளுந்துவிட்டு
எரிந்துகொண்டிருக்கிறேன் நான்"


என்று தகிக்கிற இசாக்கின் காதலிதான் இந்தக் கவிதைகளில் என்னை அதிகம் கவர்ந்தவர்.
காதலி எப்போதும் கிசுகிசுத்துப் பேச வேண்டியதில்லை; உரக்கவும் பேசவேண்டும்.

இசாக்கின் காதலி வாழ்வில் காதலைப் பார்க்காமல் வாழ்வையே காதலாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்.

"அடேய்
உன்னை
பணம் பூக்கிற செடியாகவும்
என்னை
குழந்தை காய்க்கிற மரமாகவும்
சமைத்துக்கொண்டிருக்கிறது சமுதாயம்
ஆனால்
மனிதர்களாகவே
வாழத்தூண்டுகிறது காதல்"


இசாக்கின் காதலி, இசாக்கின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; இசாக்குக்கும் தாயாகி
அவரை நேர்ப்படுத்தி நிற்கிற அழகு அது. பாரதியின் கண்ணாம்மாவைப் போல கபடங்கள்
அற்ற வெள்ளைக் காதலி போலும் அவர்.

"தனித்திருக்கிறாய் என்பதறிந்து
தொலைபேசியில்
அழைத்தேனென்கிறாயே
அடேய்
நீதான்
எப்போதும் என்னோடு இருக்கிறாயே"


என்று காதலை தனக்குள் வைத்து வாழும் பணிவும்

"அடேய்
அந்த இரவுகளில்
அவிழ்த்தெறிந்த கூச்சங்களெல்லாம்
நீ
இல்லாத இரவுகளில்
கேலியாக பார்க்கின்றன"


என்று பெண்மையின் தேவையை கேட்டு வாங்கும் துணிவும் அவருக்குள் சமமாக
இருக்கின்றன.

இப்படி அனைத்திலுமான ஆண் பெண் சமத்துவப் பதிவுகள்தாம் இன்றைய காதல் கவிதைகளில்
இசாக்கின் கவிதைகளைத் தனித்து அடையாளப்படுத்துகின்றன. இருவரும் சேர்ந்து
சிரிப்பது எவ்வளவு சுகமோ, அப்படியே சேர்ந்து அழுவதும் சுகமென்பதை இந்தக்
கவிதைகள் காதலர்களுக்கு உணர்த்தும்.

"தூர தேசத்துப் பயணம் பற்றி
சொல்ல வந்த
எனக்கு
எதிர்பாராத பரிசாக
இறுக அணைத்து
ஒரு ச்ச்ச் கொடுத்தாய்
எவருமில்லையென

அமைதியாக பார்த்து கொண்டிருந்த
கிளி
பிறகெதாவது சொன்னதா.?"

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது முத்தொள்ளாயிரத்தில் பார்த்த கிளி, அதே
அழகோடு சங்ககாலத்தைத் தாண்டி இந்தக் காலத்திற்குள் வந்து இசாக்கின் கவிதையில்
உட்கார்ந்திருக்கிறது.

நமது பண்பாட்டில்... மொழியில் இந்தத் தொடர்ச்சி ஓர் அழகு. இந்தக் கிளியின்
கண்கள் நமக்குள் காதலை விதைக்கிறது. படபடக்கும் அதன் சிறகுகள் இதயத்துக்குள்
வானத்தை விரிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி


இந்நூல் தொடர்பான பிற விமர்சனங்கள்
red angle காதலி காதலை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும்தான் காதலன் பலவீனமானவனாய்க் காட்சியளிக்கிறான்
pointமு.மேத்தா
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்