Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்


தளத்தில் கவிதையை வாசித்ததும்
கவிஞரின் பெயர் தேடினேன். கத்துக்குட்டி, சற்று வித்தியாசமான பெயர்தான். வித்தியாசம் சிந்தனையிலும்
தெரிந்தது. கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அழகாக, ஆழமான கருத்தோடு அற்புதமான வார்த்தைகளால் பின்னப்பட்டிருந்தது. மேலும் கவிதைகள் தேடினேன் கிடைத்ததென்னவோ மூன்று முத்தான கவிதைகள் மட்டுமே.

ஒருமுறைதான் காதல் வரும், அதுவும் முறிந்தால் தற்கொலையுமும், தேவதாஸ் கோலங்களும் இந்திய துணைகண்ட சினிமா கற்றுத்தந்த பாடங்கள். இன்னும் அதை முற்று முழுதாக நம்ப அல்லது நம்பி இருக்கிறார்கள். இங்கே கவிஞர் முதற்காதலின் தோல்வியை இலாவகமாக தட்டிக்கொண்டு மீண்டும் இன்னோர் உயரில் உயிர்
வைக்க ஆயத்தமாகிறார். மேலோட்டமாக பலர் இக்கருத்தை மறுத்தாலும் அதுதான் உண்மை.
'உன் நினைவுகள் இனி என்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
வேறொரு உயரில் உயிர்
வைக்க இன்று முதல் முயல்கிறேன்'காதலைப் பொறுத்தவரையில் மறத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மறந்துவிட்டேன் என்று பொய்யாக நினைவுகளை மறைத்து வைத்துக்கொள்ளலாம். இன்னொரு காதல் எல்லோருக்குமே சாத்தியமான ஒன்றே. சமூக கட்டமைப்பும், இலக்கியங்களுமே காதலைப் பற்றிய
புரிந்துணர்வை மாற்றியமைக்கிறது. 

அடுத்த கவிதையில் காதலனோ,காதலியோ முதற்காதலைப் பற்றி தற்போதய காதலிக்கோ, காதலனுக்கோ சொல்லிக்கொள்வதாக கவிஞர் எழுதுகிறார். எமது பண்பாட்டைப் பொறுத்தவரையில் காதலியின் முந்திய காதலை ஏற்றுக்கொள்கிற பக்குவம் பெரும்பாலும் ஆண்களுக்கு வரவில்லை. காதலி என்பவள் தன்னை அவளின் முதற் காதலனாக ஏற்கவேண்டும்
என்பதில் ஆண்கள் மிகவும் தீவிரமாய் இருக்கிறார்கள். ஆனால் கவிஞர் ஒரு
மேலைநாட்டு சமுதாயத்தை நோக்கி தனது கற்பனையை
எடுத்துச்செல்கிறார். 


'ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
----
----
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது'
காதல் முறிந்துபோனால் எல்லாமே வெறுக்கும். வாழ்வே அர்த்தமற்றதாகத் தோன்றும். இதயம் பூட்டியிருந்து
தூசி படிந்து விட்டதாகக் கவிஞர் கூறுகிறார். இப்பொழுது புதுக்காதல் ஆகவே அது குடிபூரலுக்கு ஒப்பானதென்று கூறுகிறார். நல்ல கற்பனை. மௌனம், காதலில் ஒரு சிக்கலான மொழிப்பிரயோகம். நிறைய அர்த்தங்கள், நிறைய குழப்பங்கள், நிறையப்
பிரிவுகள். எல்லாம் அதற்குள் அடக்கம்.

காதலில் தோற்றுப்போன ஒரு மனிதத்தின் புலம்பல் வெகு விமரிசையாக வடிக்பட்டுள்ளது. விதி என்பது அடிக்கடி எல்லாத் தோல்விகளுக்கும்
பரிகாரம் ஆகிவிடுகிறது. ஒரு மனிதன் தோல்வியில் துவண்டுபோய் விடக்கூடாது என்பதற்காக விதியின் விளையாட்டு அது உன்னுடைய தோல்வியல்ல என்று மனிதனை மனிதன் தேற்றிக்கொண்டான். ஆனால் இன்று தோற்றுப்போனவன் எல்லாம் தன்னைத்தானே விதி என்று தேற்றிக்கொள்கிறான். ஒருவனுடைய தோல்வி அவனுடைய முயற்சியின் தோல்வியே அன்றி
விதியென்று எதுவுமேயில்லை. 


'விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பாமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி 
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்'காதல் தோல்வியில் இருந்து பலபேர் வெளிவந்துவிடுகிறார்கள். சிலபேர் மட்டும் மாண்டுபோகிறார்கள். மாண்டுபோகிறவர்கள் காதல் மட்டுமே வாழ்க்கையென்று நினைத்துக்கொள்கிறார்கள். வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு மனிதன் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார் கவிஞர்.

நம்பிக்கையூட்டும் கவிதைகளைத் தந்த கவிஞர் கத்துக்குட்டி அவர்கள் மிகவும் தெளிவாகவும், வித்தியாசமாகவும் மனித உணர்வுகளை அணுகியிருக்கிறார். பிற கவிஞர்களில் இருந்து வேறுபட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள
இந்த கவிஞர் முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் அவர் வெற்றியும் கண்டிருக்கிறார்.

- நிர்வாணி .

வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
    நாடு  
தளம்
    திகதி   2012-05-02
[1]
Thanks a lot...En Manakumargalai Vaarthaigalaga Sethikiyathuku... Best regards

Jack Rajakumar.
 

 
 
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்