அரங்கேற்றம்
  - தி.ராஜகோபாலன்
  அரங்கேற்றம்
-----------------

கடவுள் இல்லையென்று யார் சொன்னது ?
இல்லாவிட்டால் நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் ?

பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் திருஒடு இலவசம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ...

என்றைக்கும் போவேன் வேலைக்கு நேர்காணல்.
இன்றைக்கும் வேலை எமக்கு காணல்நீர்.

வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்.
முன்னதின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும்.
பின்னதில் மதிப்பு குறைந்துகொண்டே போகும்.


மாநிலத்தை மூன்றாக பிரிப்பது.
முடிவு எடுக்கப்பட்டது.
தலைவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தவுடன்...

கருவூலத்தில் நெல் கொள்முதல்
கேரளத்தில் அரிசி பறிமுதல்...
வார்ப்பு
www.vaarppu.com