|
கவிஞர் ஈழநிலா பற்றிய அறிமுகக் குறிப்புக்கள்
-கவிஞர் ஸி.எஸ்.காந்தி-.
இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில்,
பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர்
ஈழநிலா1983.5.2. இல் பிறந்தவர்.ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள்
மிக முக்கியமானவர்.
பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராகவும், இலங்கை அஸ்ரப் கலை இலக்கிய
பேரவையின் தலைவராகவும் இருக்கும் இவர், ஒரு தசாப்த காலமாக ஈழத்து இலக்கியத்துக்கு
தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வருகிறார்.இவரது 200க்கும் மேற்பட்ட கவிதை,
சிறுகதை, பத்தி எழுத்துக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் ,இணைய
சஞ்சிகைகளிலும்
'ஈழநிலா', 'பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை',
,'பொத்துவிலூர்
அஸ்மின்' 'யு.எல்.எம்.அஸ்மினா' எனும் பெயர்களில் பிரசுரம்
பெற்றுள்ளன. 'விடைதேடும்வினாக்கள்'(2003)
.'விடியலின் ராகங்கள்'(2002 எனும்
மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
'ஈழநிலாவின் கவிதைகள்', ஈழத்து கவிஞர்கள் பற்றி சுடர் ஒளி வார வெளியீட்டில் இவர்
எழுதிவரும் 'ஈழநிலாவின் உணர்வுகள்' பத்தி எழுத்துக்கள் பாகம் ஒன்றும் மிக விரைவில்
நூலாக வெளிவர இருக்கிறது.
தற்போது'சுடர் ஒளி பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும்
'டான் டீவியின்' பகுதிநேர
அறிவிப்பாளராகவும் கடமைபுரியும் இவர் டான் டீவியில்
'சூரிய விரல்கள்' என்ற
இலக்கிய நிகழ்ச்சி தயாரித்து வழங்குவதோடு சுடர் ஒளி வார வெளியீட்டின்
'கவிதைப்
புனல்' தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.
சக்தி டீவியின்
'இசை இளவரசர்கள்
போட்டியில் 7000 போட்டியாளர்களுக்குள் தேர்வான 16
பாடலாசிரியர்களுள் இவரும் ஒருவர்ஏலவே தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு
'ஜனாதிபதி விருது'(2001) பேராதனை பல்கலைக்கழகத்தின்
'தங்கப் பதக்கம்' (2003) உட்பட ஏழுவிருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|