நிறைவேறிய காதல்?

பல வருடக்காதல்
நிறைவேறிய அறிகுறியாய்த்
‘திருமணச் சடங்கு’

மேளம் முழங்கவில்லை
நாதஸ்வரம் ஒலிக்கவில்லை
பிராமணிகள் இங்கே
மந்திரங்கள் ஓதவில்லை
அம்மி மிதிக்காமல்
அருந்ததியும் பார்க்காமல்
இனிதாகப் பூண்டோம்
திருமணக்கோலம்

இல்லறம் இன்பமாய்
தொடங்குகையில்
கனடிய வாழ்க்கை வட்டத்துள்
நுளைந்துகொண்டது – நம்
இல்லறமும்

ஆசைகளைப் புதைத்தும்
உணர்வுகளை கொய்தெறிந்தும்
நள்ளிரா வேளையில்
ஊரடங்கிப்போகையிலே
துணையேதுமின்றி தனியே
விட்டு
இரவுவேலை செல்லும்
‘துணைவன்’

மார்தட்டி வீரம் முழங்கும்
வாய்ப்பேச்சுகள் அடங்கிக்போக
நாலு சுவருக்குள்
பீதிபெருக்கெடுக்க
பெண்மை இங்கே மெதுவாக
நிழலாட
விழித்திருக்கும் என் இரவுகள்

- எதிக்கா

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04 00:00
Share with others