தலைநகரத் துயரக்குறிப்பு
ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு
பொழுதுகள் விடிகின்றன...!
மாறா வடுக்களின் துயர அலறல்
தேசங்களெங்கும் முட்டி மோதி
மனிதம் வாழும் இதயங்களிலெல்லாம்
விழிநீரோடு எதிரொலித்திடினும்
எவராலும் நீக்க முடியா
ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு
பொழுதுகள் கழிகின்றன...!
- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை.
இலங்கை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-19 00:00