வரலாறு
--------------
உலகத்தில்
எந்த நாட்டு காதலைப் பார்த்தாலும்
கர்வப்பட ஏதுமில்லை!
ஒருவன் ஒருவளை ஏமாற்றுவது
ஒருவள் ஒருவனை பரிதவிப்பில் விடுவது
அதனால் அவனோ
அவளோ உயிரை விடுவது
இதுதானே வரலாறு
இறந்த காலத்தில்
காதல் தோல்வி மழையில்
நனைந்து போனது
அல்லது கண்ணீரால்
இதுதானே வரலாறு
இப்போது காதலில்
புதிய நாகரீகம் பிறந்திருக்கிறது
இங்கே
காமம் ஒரு கவர்ச்சிப்பொருளாய்
புகுந்திருக்கிறது
இறந்த காலத்தில்
இதயத்தில் சுமந்து
அழுதவருண்டு!
இப்போது
வயிற்றில் சுமந்து
அழுபவருண்டு
அழிப்பவருண்டு
காதலில்
நாகரீகம் வேண்டுமானால்
புதிதாய் இருக்கலாம்
ஆனால்
வரலாறு ஒன்றுதான்.
தென்றல்.இரா.சம்பத்
ஈரோடு-2
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-09 00:00