23 October 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


கணக்கம் பாளையம் - 'ஒரு பரிசுத்த கிராமம்'
Date : 2009-09-29
நம் இனிய கணக்கம் பாளையம் கிராமம், என்றென்றுமே அதன் கண்ணியமான பழமை மாறாமல், அதே தருணம் மாறி வரும் உலகின் புதுமைகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, சூழ்நிலையின் சமநிலைக்கும் எந்தவித களங்கமும் விளைவிக்காமல்... பொருளாதாரத்திலும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு, அனைத்து கிராமங்களுக்கும் முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருப்பதில் நமக்கெல்லாம் என்றுமே மட்டற்ற மகிழ்ச்சியே! அதனால் தான் 'இந்திய அளவில் நம் கிராமம்....பரிசுத்தத்தில் முதல்மையானதென்று பரிசும் பெற்று பாரதத்தின் பெருமிதமாய் பரிமளித்து, இன்றும் பட்டொளி வீசி நிமிர்ந்து நிற்கிறது !!. இப்பெருமைகளுக்கு எல்லாம் அடிநாதமாய் விளங்கும் என் கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும் என் கனிவான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

என்றுமே ஒரு உயரிய நிலையினை வாழ்வினில் எய்திட, நாம் கடுமையாய் உழைக்க வேண்டி உள்ளது. அப்படி வேண்டிய அந்த நிலையினை அடைந்ததும், பெற்ற அந்த நிலையினை, அந்த இடத்தினை எப்படி கை நழுவிப் போகாவண்ணம் நிலையாய் தக்க வைத்துக் கொள்வது என்பதில் கவனமாய் இருப்பதில் தான்... நம் சிறப்பியல்பும், தாத்பரியமும் அடங்கி இருக்கிறது! இப்போது நம் கிராமத்தின் பொருட்டும் நம் ஒவ்வொருவர்ருக்கும் ஒரு தலையாய கடமை இருக்கிறது. அது என்னவென்றால் 'பெற்றுவிட்ட இந்த பெருமிதமிக்க பெயரினை' எப்படி கட்டிக் காப்பது? அப்படி காப்பதோடு மட்டும் அன்றி அதனை மேலும் எப்படி மெருகேற்றி அடுத்த தலைமுறைகளுக்கும் பக்குவமாய் எடுத்து செல்வது? என்பது.

நம் கால்கள், வீட்டின் வாசற்கால்களை விட்டு வெளியில் அடியெடுத்து வைத்தவுடனே, 'நாம் வீதிக்கு வந்து விட்டோம்' என்று எண்ணாமல்...'இதுவும் நம் வீட்டின் ஒரு பகுதிதான்... வீடாயினும், வீதியாயினும் நான் ஒரு போலவே பாவிப்பேன்' எனும் என்ணத்தை மனதில் திண்ணமாய் விதைத்து...இன்று முதல் வீறு நடையிட ஆரம்பிப்போம்....நம் ஊரின் பெருமை நமக்கெல்லாம் ஒரு படி முன்னே நடையிட்டு செல்லும்படி செய்வோம் !!

அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அற்புதமாய் 'கொலு' கொண்டிருக்கும் ரம்மியமான இந்த 'சப்பர உற்சவ காலத்தில்' உங்கள் அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்களை தெரிவித்து, உங்களுடன் என் கருத்துக்களை கலந்து கொள்ள, கிடைத்த வாய்ப்பினையும் எண்ணி பேரானந்தத்துடன் விடை பெறுகிறேன். நன்றி!

என்றும் பிரியமுடன்,
ரமேஷ் பெருமாள்
Web : http://www.srisowdeswariamman.com..
Posted by : ramesh.perumal@hon...

 

     

September 2009

Sun Mon Tue Wed Thu Fri Sat
12345
6789101112
13141516171819
20212223242526
27282930



Click on date to post an event

Events in this month [ 1 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்