23 October 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


vanamandalam
Date : 2009-04-03
Have a nice day

Dear Sir,

Sir I am vairabharathi,

Please issue the follwing poet in our vaarpu



சில நேரங்களில் சில மனிதாகள்



புறங்கூறுவோர்:

புறரையே பேசும் 'பீழையோர்; மனம்"

பிய்த்தெறியப்படவேண்டிய மாமிச இனம்

புறங்கூறியே வாழ்வில் மடியூம் - அவ்வுடல்

புறங்காட்டில் நாய் நரி வாயில் திணியும்....!


விதியை நம்புகிறவர்கள் :

விதியினை நம்பும் வீணார்கள் - பத்து

விரல்களையிழந்த முடவர்கள் - ஆறாம்

மதியினை பெற்றிருப்பதேன்? - இவர்கள்

மண்ணில் மனிதராய்ப் பிறந்ததேன்?


வேலையற்ற வீணர்கள் :

தேநீல் விழுந்த 'ஈ" யை விட - இங்கு

தினத்தந்தியில் விழுந்த விழிகளோ கோடி - நம்

காசினியை வீண் பேசுமிவர்கள் - என்

காலணி கூட தீண்டா குப்பைக்கூல சாதி !


முதலைக் கண்ணீர்


புளித்தாலும் அத்திராட்சையைப் புசிக்க நினைப்பர்

புலம்பியழுதே தம் காரியம் முடிப்பர்

களிப்பேயில்லா புதிய படைப்புகள் - இவர்கள்

காரியக்கார கண் துடைப்புகள்


வாழ்க்கையறியா வயதில் சிலர்

அரும்பு வயதிலே 'அவ்வன்பில்" தியூம்

அறிவையிழந்த சிறகுகள் - இந்தியா


இருக்கும் நிலை மறந்து

இவர்கள் கொடுந்தீயில் வளரும் விறகுகள் !



சில நேரங்களில் சில மனிதர்கள்

சேற்று மணலில் செய்த ஈரபொம்மைகள்.!

****************************************


பாரதீ ஓர்; ஜோதி



பாட்டுக்குள் தீ வளர்த்த பாவலனே - நம்

பாருக்குள் மா மீசை கொண்ட காவலனே !

ஏட்டுக்குள் அன்றெழுதிய கவி மந்திரமே - இஃது

எந்நாளும் எங்களுக்குள் சக்தி தந்திடுமே !



செல்லம்மா துணை கொண்ட செந்தமிழா - எங்கள்

செங்குரதி சேற்றுக்குள் நீ செந்தாமரை ! - நீர்

இல்லா பிறப்பென்றொன்று உண்டாவெனில்

இனியொரு பிறவியெனக்கு வேண்டாமென்பேன் !



விடுதலைக்கு முன்னே நான் விளைந்திருக்கக்கூடாதா?

வீரபாரதியே உன்னோடு திhpந்திருக்கக்கூடாதா?

'சுடு" வெள்ளையனேயென மாய்ந்திருக்கக்கூடாதா? - இச்

சுதேசியின் மடிமீது வீழ்ந்திருக்கக் கூடாதா?



மனமெங்கும் உனை நிரப்பி வாழ்கிறேன்.

மண்ணில் உன் பேரொன்றே வாசிக்கிறேன் ! - உன்

இனமது நானென்று நம்புகிறேன் - உன்

இளமை வரிகளில் இன்பம் பொங்குகிறேன்.!



கார்; மழை கைம்மாறு காணாது - உன்

கவி வரி பலநூறு இது போலாகும்...

பாரதி எனும் பேர் சொன்னால் போதும் - என்

பார்வைக்குள் ஒளி ஒன்பது கோளாகும் !



Web :
Posted by : vairabharathy@yah...

 

     

April 2009

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234
567891011
12131415161718
19202122232425
2627282930



Click on date to post an event

Events in this month [ 1 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்